விளையாட்டு விழா

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேல்குப்பம்,
ஆலங்காயம் ஒன்றியம், வாணியம்பாடி, வேலூர் மாவட்டம்.ஆலங்காயம் ஒன்றியத்திலேயே முதன்முதலாக விளையாட்டுக்கென தனிசீருடைகள் (SPORTS DRESS)  பெற்றோர்-ஆசிரியர் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேல்குப்பம் பள்ளியில் விளையாட்டு விழா கடந்த 13.02.2019 அன்று நடைபெற்றது.
மேலும் இப்பள்ளியில் ஆசிரியர்களின் முயற்சியால் (சொந்த செலவில்) STUDENT’S HANDBOOK  (HOMEWORK DIARY) அரசின் நோக்கங்களையும் மாணவர்களின் எதிர்காலத்தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவில் புத்தம்புது வடிவில் காலைவழிபாட்டுக் கூட்ட செயல்முறைகள், திருக்குறள், சிந்தனை துளிகள், பழமொழி என பலவற்றை உள்ளடக்கிய தன்னிறைவு கொண்ட மற்றத்தனியார் பள்ளிகளுடன் ஒப்பிட முடியாத அளவிற்கு மாணவர்களின் வீட்டுப்பாட தினசரிகுறிப்பேடு ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. இதனை ஆலங்காயம் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் திரு.R.நெடுஞ்செழியன் BEO, அவர்களும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் திரு.A.ரகு BRTE , அவர்களும் விழாவில் கலந்துக்கொண்டு பள்ளிமாணவர் வீட்டுப்பாட தினசரி குறிப்பேட்டை மாணவர்களுக்கு வழங்கி அதன் முக்கியத்துவம் குறித்து வாழ்த்தி சிறப்புரையாற்றினர். மேலும் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments