NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC - குரூப்-1 தேர்வெழுத வாய்ப்பு கோரி உண்ணாவிரதம்: நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு!


டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வெழுத
வாய்ப்பு வழங்க கோரி குருப்-1 தேர்வர்கள் அம்பத்தூரில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்புகாலதாமதமாக வெளியிடப்பட்டதால் ஏராளமானதேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 8 விதமான உயர் பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுக்கான வயது வரம்பை கடந்த ஜூலை மாதம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 30-லிருந்து 32 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கானவயது வரம்பு 35-லிருந்து 37 ஆகவும் உயர்ந்தது.இந்த நிலையில், நடப்பு ஆண்டு குரூப்-1 பதவிகளில் பின்னர் இணைக்கப்பட்ட 42 கூடுதல் பணியிடங்களைச் சேர்த்து181 காலியிடங்களை நிரப்புவதற் கான அறிவிப்பு கடந்த ஜனவரி 1-ம் தேதி வெளியிடப்பட்டது.
அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 3 முதல் 31-ம் தேதி வரை பெறப்பட்டன. இதனிடையே வயது வரம்பு தளர்வு காலதாமதமாக வெளியானதால் அச்சலுகையை பல தேர்வர்களால் பெற முடியவில்லை எனவும், பாதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களுக்கு தேர்வெழுத ஒரு வாய்ப்பு வழங்க கோரி அம்பத்தூர் உழவர் சந்தை அருகே நேற்று ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதுகுறித்து தேர்வர்களின் ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து கூறியதாவது:
கடந்த 2017, 2018--ம் ஆண்டு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி1-ம் தேதி அன்று குரூப்-1 தேர்வுக்கான முன்னறிவிப்பு வெளியிடப்பட்டதால் 1.7.2019-ம்தேதிக்குள் வயது உச்சவரம்பை எட்டியவர்கள் தேர்வெழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 31.12.2018 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந் தால்கூட 37 வயதில் உள்ளவர் களுக்கு தேர்வெழுத வாய்ப்பு கிடைத்திருக்கும். இதன்மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே,பாதிக்கப்பட்டுள்ள தேர்வர் களுக்கு தேர்வெழுத ஒரேயொரு வாய்ப்பாவது தர வேண்டும்.மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஒடிஷா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதைப் போல தமிழகத்திலும் குருப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 45 ஆக உயர்த்த வேண்டும். இவ்வாறு கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive