அகில இந்திய பணி அதிகாரிகளுக்கான 12 சதவீத அகவிலைப்படியை மார்ச் மாத சம்பள பட்டுவாடாவுக்கு முன் வழங்கக்கூடாது என கருவூலம், கணக்கு தணிக்கைத்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர்  கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:


மத்திய அரசின் நிதித்துறை அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.


 அதேபோல், தமிழகத்தில் பணியாற்றும் அகில இந்திய பணி அதிகாரிகளுக்கும் அதே தேதியில் இந்த அகவிலைப்படி அமலுக்கு வருகிறது.


 ஆனால் குறிப்பிட்ட அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவை தொகையை, 2019 மார்ச் மாத சம்பள பட்டுவாடாவுக்கு முன் வழங்க கூடாது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

1 comment:

  1. அப்புறம் எப்படி ஆகஸ்ட் - 18ல் மட்டும் கொடுத்தார்கள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments