ஐஐடி மெட்ராஸ் 2019-ம் ஆண்டுக்கான கேட் தேர்வின் இறுதி அன்ஸர் கீகளை வெளியிட்டுள்ளது.


 இத்தேர்வில் மொத்தம் 21 பேப்பர்கள் உள்ளன. பிப்.,19ம் தேதி இதற்கான இறுதி வடிவம் தயாரானது.


2019 கேட் தேர்வின் முடிவுகள் மார்ச் 16 அன்று வெளியாக உள்ளது.


ஆன்ஸர் கீக்களில் ஏதாவது தவறு இருந்தால் மாணவர்கள் பிப்., 20-22 தேதிக்குள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.


ஒரு ஆன்ஸர் கீ-யில் உள்ள தவறை சுட்டிக்காட்ட, ரூ. 500 பணம் செலுத்த வேண்டும்.


முன்னதாக கேட் தேர்வு பிப்., 2,3, 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.


இதில் 8 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


2019 கேட் ஆன்ஸர் கீக்களை பதிவிறக்கம் செய்ய பின்வரும் படிப்படியான முறையை பின்பற்றவும்.


கேட் 2019 இணையதளத்துக்குச் செல்லவும்
இறுதி ஆன்ஸர் கீ லிங்கை கிளிக் செய்யவும்


பாடவாரியாக ஆன்ஸர் கீ டிஸ்பிளே ஆகும்.
ஒரு குறிப்பிட்ட பாடத்தை கிளிச் செய்யவும்
பிடிஎஃப் பார்மெட்டில் ஆன்ஸர் கீ டிஸ்பிளே ஆகும்


ஆன்ஸர் கீயை பதிவிறக்கம் செய்யவும்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments