தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனக் காப்பாளர்,
ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வான 785
பேருக்கு பணி நியமன ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் வனத் துறையில் காலியாக உள்ள 300 வனவர்கள், 726 வனக் காப்பாளர்கள், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 2.10 லட்சம் பேர் எழுதினர்.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதி, சான்றிதழ் சரிபார்ப்புப் பணி அண்மையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வனக் காப்பாளர் பணியிடத்துக்கு 726 பேரும், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடத்துக்கு 59 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மல்லேசப்பா, சுற்றுச்சூழல், வனத் துறை சிறப்புச் செயலர் அப்பாஸ், வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் தலைவர் விஜயந்திரசிங் மாலிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...