NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரூ.515 கோடியில் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள்

பள்ளிக்கல்வித்துறை மூலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், உயர்தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்களை தலைமைச்செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
தமிழகத்தில் 6,028 பள்ளிகளில்  ரூ.515 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள், நபார்டு திட்டம் மூலம்  புதிதாகக் கட்டடப் பட்ட பள்ளிக் கட்டடங்களையும், ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும்  தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை  நடைபெற்ற காணொலிக்காட்சி நிகழ்வின் மூலம்  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  திறந்து வைத்தார்.

 இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட  செய்திக்குறிப்பு :

சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள 6 ஆயிரத்து 28 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.515.52 கோடியில் நிறுவப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களையும், பள்ளி கல்வி இயக்கக சார்பில் நபார்டு கடனுதவி திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம், பெரம்பலூர் மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள், குடிநீர் வசதிகளையும் தொடக்கி  வைத்தார்.

தருமபுரி மாவட்டம், மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி, மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளையும், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளையும், பொது நூலக இயக்ககம் மூலம்,  திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரில்  அமைக்கப்பட்ட கிளை நூலகக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்களுக்கு மடிக்கணினி:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடங்களை கணினி மூலம் கற்பிக்க உதவும் வகையில், 29, 965 பேருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும்,  மேலும்,  ரூ.30 கோடியில், அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் 23, 743  பேருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடக்கி  வைத்தார். இதில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive