ஜிப்மர் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பம் விநியோகம்

புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு, இன்று முதல் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், காரைக்கால் கிளைக்கு ஒதுக்கப்பட்ட, 50 இடங்கள் உட்பட, மொத்தம், 200 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. வரும் கல்வி ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம், இன்று காலை, 11:00 மணி முதல் ஏப்ரல், 12 வரை, ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது.மே, 20 முதல், ஜூன் 2ம் தேதி காலை, 8:00 வரை, ஹால் டிக்கெட்டை, ஜிப்மர் இணையதளத்தில், www.jipmer.puducherry.gov.in மற்றும் www.jipmer.edu.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவுத் தேர்வு, ஜூன் 2ம் தேதி, காலை 10:00 - 12:30 வரை, மாலை, 3:00 - 5:30 வரை என, இரு வேளையாக நடத்தப்படுகிறது.இத்தகவலை, ஜிப்மர் இயக்குனர், ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Share this

0 Comment to "ஜிப்மர் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பம் விநியோகம் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...