கூகுள் பிளஸ் வலைதளம் நிரந்தரமாக மூடப்படுகிறது


கூகுள் பிளஸ் கணக்குகள் ஏப்ரல் 2ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுவதால் தங்கள் ஆவணங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.


ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்குப் போட்டியாக கூகுள் நிறுவனமும் கூகுள் பிளஸ் வலைதளம் தொடங்கப்பட்டது.


 ஆனால் வாடிக்கையாளர்களிடம் போதிய வரவேற்பு இல்லாததாலும், கூகுள் பிளஸ்சில் 5 லட்சம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதால் கூகுள் நிறுவனம் அதிர்ச்சியடைந்தது.


மேலும் கூகுள் பிளஸ்சில் பாதுகாப்பு அம்சங்களும் குறைபாடுடன் இருந்ததால் கடந்த ஆண்டே கூகுள் பிளஸ்ஸை மூடுவதென அந்த நிறுவனம் அறிவித்தது.

 இந்நிலையில் அடுத்த மாதம் 2ம் தேதி முதல் கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடப்படுவதாகவும், பயனாளர்கள் தங்கள் தகவல்களை பாதுகாத்துக் கொள்ளும்படியும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source: polimer news

Share this