கூகுள் நிறுவனத்துக்கு ரூ.11,643 கோடி அபராதம்


ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் கூகுள் நிறுவனத்துக்கு 11 ஆயிரத்து 643 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


ஆன்ட்ராய்ட் இயங்குதளம், போட்டி நிறுவனங்களின் விளம்பரங்களைத் தடை செய்ததாக 2009-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புகாரின் பேரில் 2016-ம் ஆண்டு கூகுள் மீதான புகார்களை விசாரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் குழு அமைத்தது.


ஏற்கெனவே கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்துக்கு 33 ஆயிரத்து 915 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


அதற்கு முந்தைய ஆண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் கூகுள் நிறுவனத்துக்கு 18 ஆயிரத்து 911 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.


இந்நிலையில் பிரச்சல்ஸில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்பு மூன்றாவது முறையாக கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: polimer news

Share this