மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் மாநில தேர்வு வாரியத்தால்
அச்சிடப்பட்ட 10ஆம் வகுப்புக்கான 3 பாடங்களின் வினாத்தாள் வெளியானதால் அந்த
மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
மாநில தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் உயர்நிலைப்பள்ளி சான்றிதழுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் 10ஆம் வகுப்பு அல்ஜீப்ரா, வடிவியல் (ஜியோமெட்ரி) மற்றும் அறிவியல் பாடங்களின் வினாத்தாள் கடந்த 11, 13, 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சமூக வலைதளங்கள் மூலமாக வெளியானது.
இதுதொடர்பாக, பிவாண்டியை சேர்ந்த இரண்டு தேர்வுக்கூட ஒருங்கிணைப்பு மைய அதிகாரிகள் மீது தேர்வு வாரியத்தினர் சந்தேகத்தின்பேரில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில், செவ்வாய்க்கிழமை தகவல் தொழில்நுட்ப சட்டம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406ன் (குற்றப்பதிவு மற்றும் தேடுதல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...