NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆங்கிலம் முதல்தாள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம்10ம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி

'10 ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததால், அதிக மதிப்பெண் பெறலாம்', என, திண்டுக்கல் மாணவர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:

 கேள்விகள் எளிமை


எஸ்.திருநாவுக்கரசு, டட்லி மேல்நிலை பள்ளி, திண்டுக்கல்:


 புத்தகத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததால் எளிமையாக இருந்தது. சில கேள்விகளுக்கு யோசித்து பதில் எழுதும்படி இருந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் மிகவும் எளிது. நன்றாக படிக்கும் மாணவர்கள் 95 மதிப்பெண் வரை பெறலாம்


.சிந்திக்க வைத்தது


எம்.லாவண்யா, ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, திண்டுக்கல்:


ஆங்கிலம் முதல் தாள் மிக மிக எளிதாக இருந்தது. வராது என நினைத்த கேள்விகளெல்லாம் கேட்கப்பட்டிருந்தது.


ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்கள் சுலபமாக இருந்தது. படம் பார்த்து விடை எழுதும் பகுதி மட்டும் சிந்திக்கும்படி இருந்தது.

மதிப்பெண் அள்ளலாம்

ஜே.கீர்த்தனா, புனித வளனார் மகளிர் மேல்நிலை பள்ளி, திண்டுக்கல்:

 எதிர்பார்த்த மாதிரி புத்தகத்தின் பின்பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.


 இலக்கணம், ஒரு மதிப்பெண் வினாக்கள் புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டிருந்தது. ஆனால் யோசித்து எழுதும்படி இருந்தது. கேள்வி பதில், கட்டுரை, மனப்பாட பகுதி மிகவும் எளிமையாக இருந்தது. புத்தகம் முழுவதையும் நன்றாக படித்திருந்தால் மதிப்பெண் அள்ளலாம்.

ஆங்கிலம் எளிமை

ஜே.
செல்வராஜ் வேளாங்கண்ணி, ஆங்கில ஆசிரியர், ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, திண்டுக்கல்:

வகுப்பில் நடத்திய பாடங்களை புரிந்து படித்தவர்களுக்கு ஆங்கிலம் முதல் தாள் எளிமை தான்.

 மாணவர்கள் யோசித்து எழுதும்படி கேள்விகள் கேட்கப்பட்டன. ஒன்று, இரண்டு மதிப்பெண், மனப்பாட பகுதி சுலபமாக இருந்தது.


 முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. எதிர்பாராத கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. நன்றாக படிக்கும் மாணவர்கள் நிச்சயம் 99 மதிப்பெண் பெறலாம்.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive