பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு
விண்ணப்பிக்கத் தவறியவர்கள் திங்கள், செவ்வாய்க்கிழமை (மே 13, 14) சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இதில், விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையத்துக்கு திங்கள், செவ்வாய்க்கிழமை (மே 13, 14) தேதிகளில் நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மறுவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்த மையங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அதேபோல், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் மே 13, 14ஆகிய தேதிகளில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்நகலையும், தேர்வு எழுதாதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டியையும், விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதற்காக அரசுத் தேர்வுகள் சேவை மையம், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கட்டணம் ரூ. 675 செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...