பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் சாதனைசாதனை.. இந்த வார்த்தை அவ்வளவு எளிதில் கிட்டிவிடாது. பல வேதனைகளைத் தாண்டித்தான் சாதனைகள் படைக்கப்படுகின்றன.

பல சாதனைகளுக்குப் பின்புலத்தில் வேதனைகளின் கதைகள் ஏராளமாக இருக்கும். அந்த வகையில், இன்று நாம் பார்க்கவிருக்கும் சாதனையாளர் புது தில்லியை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டு வரும் துப்புரவு தொழிலாளியின் மகள் ரோஹிணி காவ்ரி.


மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரோஹிணி எம்பிஏ முடித்துவிட்டு வெளிநாடு சென்று பிஎச்டி படிக்க விரும்பினார். அவரது விருப்பத்தை சொன்ன போது, அக்கம் பக்கத்தினர், அவரது பெற்றோரை கேலி செய்தனர். மகளுக்கு காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் பிறகு யாருமே திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று.

ஆனால் வானமே எல்லை என்பதில் துப்புரவுத் தொழிலாளிக்கு எந்த சந்தேகமும் இல்லை. தற்போது ரோஹிணிக்கு வெளிநாடு சென்று பிஎச்டி படிக்க ரூ.1 கோடிக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது.

இந்த விஷயத்தை இனிப்போடு கொண்டாடி வரும் குடும்பத்தினர், சாதனைக்கு ஏழ்மை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

Share this

0 Comment to "பிஎச்டி படிக்க ரூ.1 கோடி ஸ்காலர்ஷிப்: துப்புரவு தொழிலாளியின் மகள் சாதனை "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...