பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (மே 17) தத்கலில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. 
இதில், தேர்ச்சி பெறாத மற்றும் கலந்து கொள்ள இயலாத மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு துணைத் தேர்வுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள இந்தத் தேர்வில் பங்கேற்க, கடந்த மே 10-ஆம் தேதி முதல் மே 14-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், நேரடித் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இதுவரை இந்த சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பிக்கும் போது ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் 35 ஆகியவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து, உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். 
இதையடுத்து, இதற்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments