தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்
கீழ் 14 உறுப்பு கல்லுாரிகள், 27 இணைப்பு கல்லுாரிகளில் 10 பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 8ஆம் தேதி ஆரம்பமானது.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூன்7 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் படிப்புகளுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கிய இரண்டே நாட்களில் 20,000க்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 உறுப்பு கல்லுாரிகள், 27 இணைப்பு கல்லுாரிகளில் 10 பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 8ஆம் தேதி ஆரம்பமானது. விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூன்7 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விண்ணப்ப பதிவு துவங்கிய இரண்டு நாட்களிலேயே மிக அதிகமான விண்ணப்பங்கள் சேர்ந்துவிட்டன. வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்ளை சமர்ப்பித்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. விண்ணப்ப பதிவைப் வெள்ளிக்கிழமை மாலை வரை வந்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 20,000-ஐ கடந்துள்ளது. 60% மாணவிகள் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரும்நாட்களில் இன்னும் அதிக விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம் என வேளாண் பல்கலைக்கழக டீன் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து முழுமையானவிபரங்களை http://www.tnau.ac.in/ugadmission.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...