பிளஸ் 2 தேர்வர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் மே 8-ம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.சிபிஎஸ்இ
பாடத்திட்டத்தின்கீழ் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும்
பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது.
அதன்படி சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15-ல் தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது.நாடு முழுவதும் மொத்தம் 12.87 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வுமுடிவுகள் கடந்த 2-ம் தேதி வெளியானது. இதில்83.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து பிளஸ் 2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று (மே 4) முதல் மே 8-ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்ப கட்டணமாக பாடத்துக்கு ரூ.500 செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் பெற தேர்வர்கள் மே 20, 21-ம் தேதிகளில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு கட்டணமாக ரூ.700 செலுத்த வேண்டும். மறுமதிப்பீடுக்கு மாணவர்கள் மே 24, 25-ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பாடத்துக்கு ரூ.100 செலுத்த வேண்டும். இதற்கிடையே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இலவச கவுன்சலிங் வழங்க சிபிஎஸ்இ ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மே 2-ம் தேதி முதல் இந்த ஆலோசனை மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
எனவே, மே 16-ம் தேதி வரை 1800118004 என்றஇலவசதொலைபேசி எண்ணில் அல்லது counselling.cecbse@gmail.com மின்னஞ்சல் முகவரியில் மாணவர்கள், பெற்றோர்கள் தேர்வு மதிப்பெண் தொடர்பான சந்தேகங்கள், உயர்கல்வி படிப்புகள், மனஅழுத்தம் உட்பட பல்வேறு சிக்கல்கள் குறித்துக் கேட்டு தெளிவு பெறலாம். இதற்காக71 நிபுணர்கள் கொண்ட பிரத்யேக சிறப்பு உதவிக்குழு அமைப்பு தினமும் இயக்கப்படும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம். இவ்வாறு சிபிஎஸ்இ மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...