தமிழகம் முழுவதும் 31 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான முதல்
நிலைத்தேர்வில் பங்கேற்ற ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி
தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்ற உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் குறைந்தது 7 ஆண்டுகள் வழக்குரைஞராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
மேலும் முதல் நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத்தேர்வ என இரு கட்டமாக நடத்தப்படும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி முதல்நிலைத் தேர்வுக்கு 3,562 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி தேர்வு நடந்தது.இந்நிலையில் முதல் நிலைத் தேர்வில் கலந்து கொண்ட 3,562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கேள்விகள் கடினமாக இருந்ததாலும் தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டதாலும் ஒருவர் கூட தேர்ச்சிபெறவில்லை என்று கூறப்படுகிறது.
என்ன கொடுமை சார் இது!!!!
ReplyDelete