NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்குகடும் கட்டுப்பாடுகளுடன் மே 5-ல் நீட் தேர்வு: நாடுமுழுவதும் 15 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் வரும் 5-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் உட்பட நாடுமுழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டமாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-20-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. நீட் தேர்வுக்கு நாடுமுழுவதும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.நாடு முழுவதும் நீட் தேர்வு 154 நகரங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட 14 நகரங்களில் நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில்நடைபெற உள்ளது.ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் மட்டும் அனைத்து நகரங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.தமிழ் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.ஆங்கிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு முடிந்தவரை தமிழகத்திலும், கடைசி நேரத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு அருகில் உள்ள மாநிலத்திலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.நீட் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியருக்கு உதவி செய்ய சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் முன்வந்துள்ளது.

இதுதொடர்பாக இந்நிறுவனத்தின் இயக்குநர் முகமது கனி கூறியதாவது:

தேர்வு மையம் செல்ல ‘மேப்’எங்கள் நிறுவனத்தின் 9952922333, 9445483333 என்ற வாட்ஸ்-அப் எண்களுக்கு மாணவர்கள் தங்களுடைய பெயர், நீட் பதிவு எண், வீட்டு முகவரி, தேர்வு மைய முகவரி, பிறந்த நாள், மொபைல் எண் ஆகியவற்றைப் பதிவு செய்தால் உடனடியாக அவர்களின் தேர்வு மையத்துக்கு, அவர்கள் வசிக்கும் முகவரியிலிருந்து செல்லும் வழிக்கான ‘மேப்’ அனுப்பப்படுகிறது. இந்தப் புதிய சேவை வழக்கம்போல், எந்தவிதக் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.வசிக்கும் ஊர் இல்லாமல் வேறு ஊர்களுக்கு தேர்வு எழுதச் செல்வதாக இருந்தால், அங்கு செல்ல போக்குவரத்து வசதிகள், பேருந்து, ரயில் கால நேரம் ஆகியவற்றைத் தெரிந்து முதல் நாளே மாணவர்கள் செல்ல வேண்டும்.தங்கும் இடத்திலிருந்து தேர்வு மையம் செல்லும் வழியை அறிந்திருக்க வேண்டும். உதவிக்கு வருபவரிடம் முதல் நாள் தேர்வு மையம் சென்று வரச் சொல்ல வேண்டும். ஒரு தேர்வு மையத்தில் பல அறைகள் இருக்கலாம். எந்த அறையில் உங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை முதல் நாள் மாலைஅல்லது தேர்வு அன்று காலையில் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இயலாத சமயத்தில், தேர்வுக்கு 2 மணி நேரம் முன்னதாகச் சென்று இவற்றை அறிந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு முகமது கனி தெரிவித்தார்.

விதிமுறைகள்

நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே தேர்வு மையங்கள் திறக்கப்படும். மதியம் 1.30 மணிக்குப் பின்னர் தேர்வு மையத்துக்குள் அனுமதியில்லை. அதனால், 1.15 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்று, அவரவர் இருக்கைகளில் அமர்வது நல்லது.ஒவ்வொருவருக்கும் ஓர் இருக்கை ஒதுக்கப்பட்டு, அதில் அவர்களின் தேர்வு பதிவெண் ஒட்டப்பட்டு இருக்கும். அவரவருக்குஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும். 1.30 மணி முதல் 1.45 மணி வரை தேர்வு குறித்த முக்கிய நடைமுறைகள் அறிவித்தல் மற்றும் ஹால்டிக்கெட் பரிசீலனை நடைபெறும். அப்போது மாணவர்கள் ஹால்டிக்கெட், போட்டோ ஐடியைத் தர வேண்டும்.ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 1.45 மணிக்கு விடைத்தாள் தொகுப்பு தரப்படும். 1.50 மணி முதல் 2.00 மணி வரை தங்களைப் பற்றிய தகவல்களை விடைத்தாள் தொகுப்பில் பதிவுசெய்ய வேண்டும்.தங்களுக்குக் கொடுக்கப்பட்ட விடைத்தாள் தொகுப்பில் முன் பக்கம் எத்தனை பக்கங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ, அத்தனை பக்கங்கள் இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும். இல்லை என்றால், அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். வினாத்தாளில் உள்ள குறியீடும் விடைத்தாளில் உள்ள குறியீடும் ஒரே குறியீடுதான் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.விடைத்தாளில் 2 மணி முதல் 5 மணி வரை விடைகளை எழுத வேண்டும். 5 மணிக்கு முன்னதாக யாரும் தேர்வு அறையை விட்டு வெளியேறக் கூடாது. வெளியேறும் முன், விடை பதியப்பட்ட ஓஎம்ஆர் தாளைக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும். தேர்வு அறைக்குள் கண்காணிப்பாளர்கள் தேர்வு நேரத்தை தொடங்கும்போதும், நடுவிலும், முடியும்போதும் அறிவிப்பார்கள். வருகைப் பதிவுத் தாளில், மாணவர்கள் தங்கள் விரல் ரேகைகளைப் பதிய வேண்டும்.நீட் ஹால்டிக்கெட், விண்ணப்பத்தில் பதிவுசெய்த புகைப்படத்தின் அதே நகல், செல்லத்தக்க போட்டோ அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

அனுமதியில்லாத பொருட்கள்

தேர்வு எழுத பால்பாய்ன்ட் பேனா ஒன்று தேர்வு மையத்தில் வழங்கப்படும். ஜியோமெட்ரிக் பாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் உள்ளிட்ட எதற்கும் அனுமதி இல்லை. மொபைல் போன், புளூடூத், பென் ட்ரைவ், பேஜர், ஹெல்த் பேண்ட், கை கடிகாரம், கைப்பை, கேமரா, காதணிகள், வளையல்கள், ஆபரணங்கள் ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை.

ஆடை கட்டுப்பாடு

மென்மையான நிறத்தில் ஆடை இருக்க வேண்டும். அரைக்கை சட்டைக்கு அனுமதி உண்டு. முழுக்கை சட்டை அணியக் கூடாது. மதச்சார்பான, அதிகம் உடல் மறைக்கும் ஆடைகள் அணிபவர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகத் தேர்வு அறைக்கு வந்து, ஆசிரியைகளின் சோதனைக்கு உள்ளாக வேண்டும். தேர்வு மையத்துக்குள்ளாக ஷூ அணியக் கூடாது.செருப்பு மட்டுமே அனுமதிக்கப்படும். அவையும் ஹை ஹீல்ஸ் உள்ளதாக இருக்கக் கூடாது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive