ரூ50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.. தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வேலூர் மாவட்ட நீதித்துறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் அடிப்படை பணிகளில் காலியாகவுள்ள 15 இரவு காவலர், முழு நேர பணியாளர்(மசால்ஜி) பணியிடங்களை தற்காலிகமாக நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15

பணி: இரவு காவலர் - 12
பணி: முழு நேர பணியாளர்(மசால்ஜி) - 03

தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து பதிவுத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்ப வேண்டும்.

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பட்டியல் தகுதித் தேர்வுக்கு இந்நீதிமன்ற districts.ecourts.gov.in/vellore மற்றும் districts.ecourts.gov.in/tn/vellore என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அழைக்கப்படுவோர் மட்டும் தகுதித் தேர்வில் கலந்துகொள்ளலாம். பின்னர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தலைமை நீதித்துறை நடுவர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வேலூர் - 632 009

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%20Notification%202019%20Criminal%20Unit%20-%20Vellore_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:16.05.2019

Share this

1 Response to "ரூ50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.. தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!"

  1. சம்பளம் கணக்கு தெரியாமல் 50000 என்று கூறாதீர்கள்.18000 மட்டுமே கிடைக்கும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...