பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் ஆர்வத்தோடு விண்ணப்பம்: பதிவு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது

பொறியியல் படிப்பில்
சேர மாணவ-மாணவியர் ஆர்வத்தோடு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள். 5-வது நாளான நேற்று பதிவு எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள்,அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்பொதுகலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.இதற்கான ஆன்லைன் பதிவு மே 2-ம் தேதி தொடங்கியது. முதல்நாள் அன்று 15,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு சென்றும் மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆன்லைன் பதிவின் 5-வது நாளான நேற்று பதிவு எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறும்போது, “பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆர்வத்தோடு ஆன்லைனில் பதிவுசெய்து வருகிறார்கள். விண்ணப்பக் கட்டணத்தையும் நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக செலுத்திவிடலாம். திங்கள்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 50,000-க்கும் மேற்பட்டோர்ஆன்லைனில் பதிவுசெய்துள்ளனர்” என்றார்.பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் இடங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, "இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டுக்கு எத்தனை இடங்கள்கிடைக்கும் என்பது மே இறுதி வாரத்தில் இறுதிசெய்யப்படும்" என்றார்.பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கமே 31 கடைசி நாள் ஆகும்.
ஆண்டுதோறும் சராசரியாக 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வந்தாலும் அதில் 50 சதவீத இடங்கள் காலியாகவே இருக்கும். முன்னணி கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் கலந்தாய்வில் விரைவாக நிரம்பிவிடும். ஆனால், சாதாரண கல்லூரிகள் என்று கருதப்படும் கல்லூரிகளில்தான் இடங்கள் காலியாக இருக்கும். கலந்தாய்வு மூலம் ஒரு மாணவர்கூட சேராத கல்லூரிகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

Share this

0 Comment to "பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் ஆர்வத்தோடு விண்ணப்பம்: பதிவு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...