தமிழகத்தில் உள்ள, 500க்கும் மேற்பட்ட
இன்ஜினியரிங் கல்லுாரிகள், தமிழக உயர்கல்வி துறை அங்கீகாரத்துடன், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன. பிளஸ் 2 முடித்தவர்கள், இந்த கல்லுாரிகளில், பி.இ., மற்றும், பி.டெக்., படிப்புகளில் சேர, தமிழக அரசின் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.கடந்த ஆண்டு வரை, அண்ணா பல்கலை வழியாக கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு முதல், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வாயிலாக, ஒருங்கிணைந்த ஆன்லைன் மற்றும் ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 2ல் துவங்கியது; வரும், 31 வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.விண்ணப்ப பரிசீலனை முடிந்து, ஜூலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், தங்கள் மதிப்பெண் அடிப்படையில், எந்த வகை கல்லுாரிகள் மற்றும் பாடப் பிரிவுகள் கிடைக்கும் என, முடிவு செய்யவேண்டியுள்ளது.அதற்கு வசதியாக, ஒவ்வொரு ஆண்டும், கட் - ஆப் மதிப்பெண் பட்டியலை, கவுன்சிலிங் கமிட்டி வெளி யிடும். இதன்படி, இந்த ஆண்டு, 2018 - 19க்கான, கட் - ஆப் மதிப்பெண் பட்டியலை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments