அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'!

விக்கிரவாண்டி, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்,
தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குமாரகிருஷ்ணன். இவர், அரசு அனுமதியின்றி தனி நபர்களிடம் மாதாந்திர ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில், பணம், கொடுங்கல் வாங்கல் தொடர்பான பிரச்னை உள்ளதாக, அவர் மீது பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.இந்த புகார் மீது, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலக உத்தரவின் படி, துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், அவர் மீதான புகார் உறுதிசெய்யப்பட்டது.இதையடுத்து, அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து, பள்ளி கல்வித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். அவர், நேற்றுடன், பணி ஓய்வு பெற இருந்தார். அவரது பணி ஓய்வு உத்தரவு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை திருக்கோவிலுார், கபிலர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ராஜா. இவர், பள்ளி மாணவர்களிடம் முறைகேடாக பணம் வசூலித்ததாக, புகார் எழுந்துள்ளது.இது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு, அவருக்கு, பள்ளிக் கல்வித் துறை அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், மேல்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது

Share this

0 Comment to "அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...