தொழில் நுட்ப சிக்கலால்
மே 10 க்குப்பின் 'ஆன்லைன்' 'டிசி' வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்கள் உயர் கல்வி மற்றும் பிற பள்ளிகளில் சேர விரும்புவோருக்கு கையால் எழுதி பள்ளிமாற்றுச்சான்றிதழ் (டிசி) வழங்கினர். மே முதல் 'ஆன்லைன் டிசி 'வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைப்பெற பள்ளிகளுக்கான 11 இலக்க 'யூடிஎஸ்' எண்களை பதிவு செய்தால் பள்ளி இணையதளம் திறக்கும். அதில் மாணவரின் 'எமிஸ்' எண்ணை பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட மாணவரின் முழுவிபரம் பெறலாம். இதில் ஒரு நகல் மாணவருக்கும், மற்றொன்று பள்ளியில் பாதுகாக்கப்படும்.இந்நிலையில் ஆன் லைன் டிசி வழங்குவதில் திடீர் சிக்கல் உருவாகியுள்ளது. ஒருமுறை ஆன்லைனில் அதனைடவுன்லோடு செய்தால் அந்த மாணவரின் விபரங்கள் மீண்டும் துறையின் பொது சர்வருக்கு சென்று விடும்.
அதன்பின் மாணவர் விபரம் மீண்டும் பெறுவதிலும் அல்லது அரசின் சலுகை பெற்றதை பதிவு செய்வதோ இயலாது. அதில் எந்த திருத்தமும் செய்ய முடியாது. மேலும் இணையதள வேகம் குறைவாக இருப்பதால்ஒரே நாளில் பலருக்கு டிசி வழங்க இயலாதநிலை உள்ளதாக பள்ளிகள் புகார் தெரிவித்தன. இதன்படி குறைபாடுகள் நிவர்த்தி செய்து புது மென்பொருள் உருவாக்கி மே 10 க்குப்பின் ஆன்லைன் டிசி வழங்கப்படும், என கல்வித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...