குறிப்பாக SBI வங்கி சேமிப்பு கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக
இருப்பு வைத்திருக்கும்போது அதன் வட்டி விகிதம் 3.25%-மாக குறைப்படும் என
அறிவித்துள்ளது. தற்போது இந்த வட்டி வீதம் 3.5%-மாக இருப்பது
குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் ஒரு லட்சத்திற்கும் குறைவாக வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை
வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 3.5% வட்டி விகிதம் தொடர்ந்து
அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் SBI தங்களது சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைத்துள்ளது.
எனவே ரிசர்வ் வங்கி எப்போதெல்லாம் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றி
அமைக்கிறதோ அதற்கேற்றவாறு SBI வங்கி சேமிப்பு மற்றும் கடன் திட்டங்கள்
மீதான வட்டி விகிதமும் தானாகவே மாற்றி அமைக்கப்படும். இந்தப் புதிய
விதிமுறையானது நாளை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...