NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அதிகரித்து வரும் உபரி ஆசிரியர்கள் பிரச்சினைக்கு தீர்வு தான் என்ன? - Full Article - உங்கள் கருத்தையும் மறக்காமல் Comment Box ல் பதிவு செய்யவும்.



"வகுப்புக்கு ஒரு ஆசிரியர்" என்ற ஒரு





உத்தரவு மட்டுமே அரசுப்பள்ளிகளை காப்பாற்ற முடியும்.

நீதியரசர்களுக்கு  /ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள்

"ஒரு லட்சம் மாணவர்கள் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ப்பு"
"1315  அரசுப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவன் கூட சேரவில்லை "
"16000 ஆசிரியர்கள் உபரி "
"அங்கன்வாடிகளில் பணியாற்றுவது கௌரவக்குறைச்சலா?"

இந்த 4 செய்திகளும் கடந்த சில நாட்களில் தனித்தனியாக நாளிதழ்களில் இடம் பிடித்தவை.  ஆனால்  ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

ஆசிரியர் கலந்தாய்வுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இறுதித்தீர்ப்பு வரும்வரை உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் என்ற  நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டு தான் இருப்பார்கள். 
     
உபரி ஆசிரியர்கள் என்றால் யார்? 

தமிழக அரசின் கல்வித்துறை நிர்ணயித்திருக்கும் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30.  ஈராசிரியர் பள்ளிகளுக்கு  மாணவர்கள் எண்ணிக்கையை பற்றி பிரச்சினை இல்லை.  அதற்கு மேல் கூடுதல் ஒவ்வொரு ஆசிரியர் பணியிடத்துக்கும் 30  மாணவர்கள் வீதம் தேவை.  இந்த விகிதத்தை விட மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் உபரியாக கருதப்படுவர்.

வகுப்புக்கு ஒரு ஆசிரியர் ஏன் அவசியம்?

மிகக்குறைவான எண்ணிக்கை உள்ள ஒரு பள்ளியை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். 10 மாணவர்கள்  2 ஆசிரியர்கள் உள்ள பள்ளி. 1 முதல்  5  வகுப்பு வரை வகுப்புக்கு  2 மாணவர்கள் என மொத்தம்  10 மாணவர்கள்.  1 மற்றும்  2  ஆகிய வகுப்புகளுக்கு தலா  4 பாடங்கள்.  3 முதல்  5  வரையிலான வகுப்புகளில் தலா 5 பாடங்கள்.  ஈராசிரியர் பள்ளி என்றால் ஒரு ஆசிரியருக்கு  குறைந்தது 11 பாடங்கள்.  ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு பருவத்திற்கு குறைந்த பட்சம் 55 பக்கங்களைக்கொணட பாடநூல்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் யாராலும் எந்த வகுப்பிற்கும் முழுமையாக பாடம் கற்றுக் கொடுக்க முடியாது. எப்படி கல்வித்தரம் உயரும்?  ஐந்தாம் வகுப்பு பயில்கின்ற ஒரு மாணவன் மூன்றாம் வகுப்பு மாணவனோடு ஒன்றாக அமர்ந்து பயில வேண்டும் என்பது கல்வி உரிமைக்கு எதிரானது.  ஐந்து வகுப்புகளுக்கு  இரண்டு ஆசிரியர்கள் இருக்கின்ற பள்ளிகளில் எந்த பொது அறிவு உள்ள பெற்றோரும் தங்கள் குழந்தைகளை சேர்க்க மாட்டார்கள்.

ஏன் உபரி ஆசிரியர்களை நிரவல் செய்ய வேண்டும்?

ஒவ்வொரு ஆண்டும் தணிக்கைத்துறை கீழ்க்கண்டவாறு கண்டனம் தெரிவிக்கிறது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை விட தமிழகத்தில்  ஆசிரியர்கள் அதிகமாக உள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் தேவையின்றி வழங்கப்படுகிறது. எனவே அவர்களை வேறு பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்பட வேண்டும். நியாயம் தான்.

வரவு செலவு கணக்கு பார்த்து தணிக்கை செய்ய கல்வி லாபம் தரும் தொழில் கிடையாது.  எனவே ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் செலவு கிடையாது. எதிர்கால மனித வளத்தை கட்டமைப்பதற்கான முதலீடு.  இதை உணரும் அரசு மட்டுமே எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் அரசாகும்..

அரசின் கொள்கைபடி ஆசிரியர் மாணவர் விகிதம் இல்லாததால் தணிக்கைத்துறை கண்டனம் தெரிவிக்கிறது.  வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்று அரசுக்கொள்கையை மாற்றி அமைத்து விட்டால் இந்தப்பிரச்சனை தீர்ந்து விடும். இதில் ஏதும் தடை இருப்பதாக தெரியவில்லை.  சட்டச் சிக்கல் ஏதும் இருந்தால் விவரமறிந்தவர்கள் கூறலாம்.

உண்மையில் உபரி ஆசிரியர் என்பதே கிடையாது. அவர்களை உரிய முறையில் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமாக  வேலை வாங்க முடியாதது தான் பிரச்சினை. அது யாருடைய தவறு என்று நாம் ஆராய வேண்டாம்.

என்ன செய்யலாம்?

தீர்வு 1 #

மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் தொடக்கப்பள்ளிக்கு குறைந்த பட்சம் 5 ஆசிரியர்கள் , நடுநிலைப்பள்ளிக்கு குறைந்தபட்சம் 8 ஆசிரியர்கள் என்ற கணக்கில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என அரசு அறிவிக்கவேண்டும்.  ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட 5 சதவீதமாவது அதிகமாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் ஒரு விதியாக வைக்கலாம்‌. .இப்படி கணக்கிட்டால் உபரி இருக்காது. மாறாக வேலை வாய்ப்பு உருவாகும்.  பொதுமக்கள் மத்தியில் அரசுப்பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் உள்ளனர் என்ற மதிப்பும் உண்டாகும்.  இதனால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

தீர்வு 2 #

ஆசிரியர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு,  மகப்பேறு விடுப்பு ,பணியிடை பயிற்சி, கணக்கெடுப்பு பணி,  தலைமை ஆசிரியர் கூட்டங்கள் ஆகியவற்றிற்காக பள்ளியை விட்டு செல்லும் போது மாணவர்களின் கற்றல்  பாதிக்கப்படுகிறது.  ஒவ்வொரு ஒன்றியத்திலும் உபரி  ஆசிரியர்களை கொண்ட ஒரு "பதிலி" ஆசிரியர் குழுவை உருவாக்க வேண்டும் .எந்த பள்ளி ஆசிரியர் விடுப்பில் சென்றாலும் உடனே பதிலி ஆசிரியர் அப்பள்ளிக்கு சென்று கற்பித்தல் பணியை தடங்கலின்றி ஆற்றலாம்.

அரசு பேருந்துகள், தொடர்வண்டி , அஞ்சல் துறை, மருத்துவமனைகள் ஆகிய சேவைகளில்  உள்ள பணியாளர்கள் விடுப்பில் சென்றால் பதிலி நியமிப்பது வழக்கமே‌. இல்லாவிட்டால் இந்த சேவைகள் பாதிக்கப்படும்.  இதற்கு இணையான சேவை கல்விச்சேவை.  மாணவர் நலனும் பாதுகாப்பும் சம்பந்தப்பட்ட இவ்விஷயத்தில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு நாள் தேர்தல் பணிக்கே ரிசர்வில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இருக்கும் போது முக்கியத்துவம் வாய்ந்த கல்விப் பணிக்கு  உபரி ஆசிரியர்களைக் கொண்ட " ரிசர்வ் " அணியை அமைக்கலாம்.

தீர்வு 3 #

தொடக்கப்பள்ளிகளில் ஓவிய ஆசிரியர்கள் , உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் கிடையாது. ஒவியம், விளையாட்டு, இசை உள்ளிட்ட திறன்கள் இளம் வயதிலேயே  அவசியம் முறைப்படி கற்பிக்கப்பட வேண்டியவை.   இத்திறன்களில் ஆர்வமுடைய உபரி ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து தக்க பயிற்சி அளித்து அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் பணியமர்த்தலாம்.

தீர்வு 4 #

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு முட்டி மோதும் தனியார் பள்ளிகளுக்கு அருகில் அரசே அனைத்து வசதிகளுடன் கூடிய "மாதிரி பள்ளிகளை " அமைத்து அப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை நியமிக்கலாம். 

தீர்வு 5#

வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்று நியமிக்கும் போது ஆசிரியர் தேவை ஏற்பட்டால் ஆசிரியர் தகுதி பெற்று பள்ளியின் கணக்கெடுப்பு பகுதியில் உள்ளவர்களை குறைந்த தொகுப்பூதியத்தில்  உதாரணமாக ₹ 10000 க்கு தற்காலிகமாக நியமிக்கலாம்.   இரண்டு ஆண்டுகள் அவருடைய முயற்சியில் தொடர்ந்து 30 மாணவர்களை பள்ளியில் சேர்த்தால் அவரது பணியை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கலாம்.

எடுத்துக்காட்டாக மேலே சொன்ன 5 தீர்வுகள் பல ஆசிரியர்கள் மனதில் நெடுநாட்களாக உள்ள தீர்வுகள். களத்தில் உள்ள ஆசிரியர்களிடம் விவாதித்தால் மேலும் பல தீர்வுகள் கிடைக்கும்.  கல்வித்துறை ஆய்வுக்கூட்டங்கள் பெரும்பாலும் விவாதங்களாக இல்லாமல் ஒருவழிப்பாதையாக உத்தரவுகளை பிறப்பிக்கும் கூட்டமாக அமைந்துவிடுகிறது. களத்தில் உள்ள ஆசிரியர்களின் கருத்துக்கள் கேட்கப்படுவதே இல்லை.

" தனியார் பள்ளிகளுக்கு இணையாக" என்ற தொடரை அடிக்கடி பயன்படுத்தும் கல்வியாளர்கள் தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியம் அளித்தாலும் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர்  என்பதை சுலபமாக மறந்து விடுகிறார்கள். இது தான் அடிப்படை என்று தனியார் பள்ளி அதிபர்களுக்கு தெரிந்திருக்கிறது.  தெரிய வேண்டியவர்களுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

வயிற்றுக்கு உணவளிக்காமல் முகத்துக்கு அலங்காரம் செய்வதில் எவ்வித பயனுமில்லை.   வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நியமிக்காமல் மாணவர்களுக்கு ஷூவும்  டையும் பெல்ட்டும் வழங்குவதில் பயனளிக்காது.

அரசுப்பள்ளிகளை காப்பாற்றி மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றால் மேற்சொன்னதை போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம். இல்லையெனில் தினமொரு வர்ணஜால அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு மறுபக்கம் பள்ளிகளை மூடும் பணியை தொடரலாம்.





20 Comments:

  1. student teacher ratio may be changed to 20:1

    ReplyDelete
  2. 1.English medium classes have been started now. The strength of English medium is less. The strength will raise in coming years. These classes are not taken into account. The students in English medium classes should be counted separately. But this is not done. IF 20 students in Tamil medium class and 10 students in Tamil medium, it needs two classes. But Government adds 20+10 and says 1 teachers is enough for 30 students. If this is the situation, how the public come forward to admit their children in Govt Schools
    2. In private schools, the filter dull students in 9th standard and give 100% result in 10th standard. But some Government schools to support Private schools, the regularly promote dull students every year to 10 standard to show that Government schools are not able to give 100% results. Those Headmasters are REWARDED by nearby private schools. Action should be taken against them.
    3.Achieving students in Government schools are "sent honorably" private schools, to boost the result of private schools. This is done by high officials. This should be forbidden.
    Government INDIRECTLY promotes result of private schools.
    4. Private schools should be ordered to give reasonable salary to theirs teachers through banks.
    5. New private schools should not be permitted for next 5 years by Government.
    6. Budget allotted for governments schools and fees collected by private schools from students should be compared.
    7. Government spends much for students but admissions is less. Government should take it as challenge to avoid this in future

    ReplyDelete
  3. Teachers are selected by TRB and a seniority is assigned to them. Surplus should be based on that senioriy

    ReplyDelete
  4. நான் maths bt .நான் B.LIB.I.Sc (corres)
    படித்துள்ளேன்.நான் நூலகராக பணிபுரிய ஆர்வமாக இருக்கிறேன்.

    ReplyDelete
  5. நான் வடசென்னையில் மாணவர் அட்டைக்கணினியில் கற்றல் தொடர்பாக ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன். 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். அவர்கள் ஆங்கிலவழியும்,தமிழ்வழியும் கலந்து படித்து வந்துள்ளனர். இரண்டு ஆசிரியர்கள் வகுப்புகளில் இருந்தும் மாணவர்களைச் சமாளிக்கத் தெரியவில்லை. ஏன் ஆங்கில வகுப்புகளைத் தனியாகப் பிரித்து பாடம் நடத்தினால் என்ன? அதிகமாக உள்ள ஆசிரியர்களை பணி இடமாற்றம் செய்யலாம் அல்லவா? பாடத்திட்டம் இப்போதுதான் மாற்றப்பட்டுள்ளது. ஒழுக்கம் கடைபிடிப்பதில் மாணவர்களை ஆசிரியர்கள் சரிவர கவனித்தால் மாணவர் எண்ணிக்கை அதிகமாகும்.

    ReplyDelete
  6. All state board schools buildings are renewed and ensure for 100% safe sitting. several fake certificates teachers are appointed by the parties on basis of Communal/cast/religion/language are to be removed and fresh teachers who familiar in latest education system (most of the existing teachers are to be re qualified or otherwise removed and posted for other department). For government appointments NO வாரிசு based placements. Who working with fake certificates to be punished. Sufficient number of teachers should be appointed for all schools. Now a days there are many GO's from education departments, it gives unnecessarily trouble to follow the students. For educational developments there are some loose talks or comments from an uneducated person to be punished. To public the Media should come forward to give opinion with qualified media person against the finalized GO's. Nothing will happened if 3 languages system up to 9th standard, it means Hindi should prime languages for Indians.

    ReplyDelete
  7. Before ten years opened the private schools all will be close to immediately.

    ReplyDelete
  8. Abolishing the private schools alone will solve the problem.

    ReplyDelete
  9. PRIVATE SCHOOL YELLAM CLOSE.....PANNA....SOLLUNGA.......GOVERNMENT SCHOOL...LA STRENGTH...ADIKAMA......AKKUM

    ReplyDelete
  10. PRIVATE SCHOOL...MATTUM......CLOSE PANNITU.....GOVERNMENT SCHOOL LA.....MATTUMTHAN......PADIKANUM....NU....SATAM....POTTUNGA......PRIVATE SCHOOL....KU....NADATHA......PERMISSION TARATHINGA......ALL PRIVATE SCHOOL YELLAM GOVERNMENT YEDUTHU....NADATHATUM....UBARI ASERIYER......YENDRA
    PRACHANA......VARATHU..

    ReplyDelete
  11. You are absolutely right but no one will incline their ears to your words. If my guess is correct nearly 80% of govt schools won't be here my dear comrade.

    ReplyDelete
  12. அனைத்து ஆசிரியர்களும் வாங்கும் ஊதியத்திற்கு மனசாட்சியுடன் வேலை பார்த்தால் அரசு பள்ளி சிறப்பாக அமையும். நானும் ஒரு அரசு பள்ளி ஆசிரியர்தான். எடுத்துக்காட்டாக பல அரசு பள்ளிகளை சுட்டி காட்டலாம். அவர்களால் முடியும் என்றால் நம்மால் முடியாதா?. நமக்கு வாழ்வாதாரம் கொடுத்த பள்ளி நம்முன்னே அழிவதா?..

    ReplyDelete
  13. அனைத்து ஆசிரியர்களும் வாங்கும் ஊதியத்திற்கு மனசாட்சியுடன் வேலை பார்த்தால் அரசு பள்ளி சிறப்பாக அமையும். நானும் ஒரு அரசு பள்ளி ஆசிரியர்தான். எடுத்துக்காட்டாக பல அரசு பள்ளிகளை சுட்டி காட்டலாம். அவர்களால் முடியும் என்றால் நம்மால் முடியாதா?. நமக்கு வாழ்வாதாரம் கொடுத்த பள்ளி நம்முன்னே அழிவதா?..

    ReplyDelete
  14. up to 5th std as a old and senior student 2 teacher is sufficient and as a student studied fully in govt institution nearly 37 yrs of my educational and 25 yrs of top scholar teacher in university i have correct thought of explaining if any body asked and in addition pl ask the methodology of teaching up to 5th std teachers who retired and at the age between 75-80 of their experience in teaching that too as teacher who were working as a husband and wife in the same school and stayed in the same penises. thanks pl try to teach to students with manasatchi if realy have.

    ReplyDelete
  15. சரி

    1:20 விகிதம் படி நிர்ணயம் செய்தல்
    வகுப்புக்கு ஒரு ஆசிரியர்
    அலுவலக வேலை என்று நியமனம் செய்தால் உபரி ஆசிரியர் இருக்காது

    ReplyDelete
  16. அரசுக்கு எடுத்துரைக்க வழி செய்ய வேண்டும்

    ReplyDelete
  17. Most private schools appointed one teacher (handle i st std 4 section or 5 section) only.(her qualification-B.SC.,B.Ed, or P.G.Because our education system fully based i std (letters,sentence frame,story time) But our govt school model BASED only one teacher handle i std to 5 std. So the teacher could not able to covered full teaching methodology,and teaching skills. So the teacher should to take care the first std students.Then automatically the child read and write 2nd std syllabus. The long absent second std student did not know the letters. The teacher will sit and teach the letters. But the teacher did not teach the letters. So automatically the parent approach the private school. Some money minded school teach well verse teaching methodology. So the parent select
    good school(ist std to eng.college or medical college).This is natural people mind. All govt teachers are not in good
    edu.background. Most of the teachers came only money mind. Then how will possible to make kamarajar mind based govt school!

    ReplyDelete
  18. மாணவர்கள் அசிங்கமாகப் பேசுவதால் தனியார் பள்ளிகளுக்குச் செல்வதாக மாணவர்கள் கூறுகின்றனர். ஒழுக்கத்தை ஆசிரியர்கள் சரிவரப் பின்பற்றச் செய்தாலே இப்போது அளித்த பாடத்திட்டத்திற்குப் போதுமானது.எண்ணிக்கை அடுத்த வருடத்தில் அதிகரித்துவிடும்.(காரணம்-இலவசங்கள்டேப்லட்,லேப்டாப்) காலை உணவும் அளித்தால் இன்னமும் மாணவர் எண்ணிக்கை கூடும். அரசிடம் பணம் இல்லை என்றால் அம்மா உணவகங்களில் இருந்து காலை உணவு அளிக்கலாம் அல்லவா!அரசு பள்ளியில் இருந்து படித்து வெளியேறும் மாணவன் அரசுப்பணியில் (கல்லூரி)இரண்டாண்டுகள் பணி செய்யவேண்டும் என கொண்டுவரவேண்டும்.

    ReplyDelete
  19. Mohammed Yasin7/19/2019 4:15 pm

    teacher student ratio must be restructured to 1:20. then all the schools should have english medium. finally important one- Govt should bring a law and announce that only students from Govt schools are eiligible to get admission in Govt colleges. this will make surplus admission in Govt schools.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive