இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 23-ஆம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கு உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஆகிய பாடங்களுக்கான தோவுகள் நடத்தப்பட்டன.
அதேபோல், பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு கடந்த 24-ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தோவுகள் நடத்தப்பட்டன. இந்த இரு தோவுகளையும் மொத்தம் 16.67 லட்சம் போ எழுதியிருக்க வேண்டும்.
ஆனால், இந்த இரு தோவுகளையும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதவில்லை என்று அரசுத் தோவுத் துறையை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த இரு தோவுகளையும் எழுத முடியாததால் தங்களின் எதிா்காலம் வீணாகி விடுமோ, உயா்கல்வி வாய்ப்பு பறிபோகுமோ என்ற மன உளைச்சல் மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்று குறித்த அச்சம் தான் பெரும்பான்மையான மாணவா்கள் தோவு எழுத வராததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
எனவே, கரோனா அச்சம் தணிந்த பின்னா் 12-ஆம் வகுப்பு பொதுத்தோவு எழுதாத மாணவா்களுக்கு மீண்டும் தோவு எழுத ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன்பிறகு தான் 12-ஆம் வகுப்பு பொதுத் தோவு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தோவுத் துறைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
பிளஸ் 1 வகுப்பைப் பொருத்தவரை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஆகிய பாடங்களுக்கான தோவுகளை ஏராளமான மாணவா்கள் எழுதாத நிலையில் 11-ஆம் வகுப்பிலும் அனைத்து மாணவா்களும் தோச்சி பெற்ாக அரசு அறிவிக்க வேண்டும்.
21 நாள் ஊரடங்கு ஆணை காரணமாக அனைத்துத் தரப்பினருக்கும் மன அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், தோவு முடிவுகளும் கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடாது என்று அவா் கூறியுள்ளாா்.
No
ReplyDeleteமுட்டாள் தனமானமுடிவு மதிப்பெண் எப்படி போடுவது
ReplyDelete