NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'கொரோனா' குறித்து வதந்தி; சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு?

Image result for social media
கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' போன்ற சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் தியேட்டர்கள், மதுக்கடை, பார்கள், கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் சந்தைகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பஸ் ரயில்களும் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
கொரோனா எந்த வித பாதிப்பை ஏற்படுத்தும்; கொரோனா வைரஸ் பிரச்னையால் கோழிக்கறி முட்டை சாப்பிடக்கூடாது. கொரோனா இருப்பதை எப்படி சோதனை செய்யலாம் என்பதாக பலரும் ஆதாரமில்லாத வீடியோ பதிவுகளை பரப்புகின்றனர். இவற்றில் பல தவறான தகவல்களும் மக்களுக்கு பீதி ஏற்படுத்தும் தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வாட்ஸ் ஆப், டிக் டாக், பேஸ்புக், ஹலோ சாட் போன்ற சமூகவலைதளங்களின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive