NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th,11th, 12th Public Exam June 2020 - New Time Table - Download

images%2528115%2529


  • 10th Standard - Public Exam Time Table 2020 ( Due to Corona - Latest) - PDF Download Here
  • 10th, 11th, 12th Standard - Public Exam Answer Sheets - Valuation Camp (Due to Corona - Latest) - PDF Download Here

10-வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதி முதல்  பொது ஊரடங்கு அமலில் உள்ளது. வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால், தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்கள் தேர்ச்சி  பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இன்னும் 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படவில்லை. பிளஸ் 1 பொதுத்தேர்விலும் ஒரு பாடத்திற்கு தேர்வு நடத்தப்படவில்லை.

 ஆனால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அறிவித்தது. கடந்த சில நாட்களுக்கு முன், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஜூன் மாதத்தில் அட்டவணை தயாரிக்க  திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்தவுடன் ஜூன் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை  வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 10-வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார். 11-ம் வகுப்பு கடைசி தேர்வு ஜூன் 2-ம் தேதி நடைபெறும். மார்ச் 26-ல் நடைபெற இருந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டதால் ஜூன் 2-ம் தேதி நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு கடைசி தேர்வை எழுதாத 36 ஆயிரம் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.




IMG-20200512-WA0003

12-ம் வகுப்பு மதிப்பெண் திருத்தம் பணி மே 27-ம் தேதி முதல் தொடங்கும் என்றார். தேர்வு அறையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும். மாணவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் செய்து தரப்படும். பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
20200512122254

10-வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

ஜூன் 1 மொழிப்பாடம்.
ஜூன் 3 ஆங்கிலப்பாடம்.
ஜூன் 5 கணிதம்
ஜூன் 6 விருப்ப மொழிப்பாடம்
ஜூன் 8 அறிவியல்
ஜூன் 10 சமூக அறிவியல்
ஜூன் 12 தொழிற்பாடம்




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive