Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வருங்கால வைப்பு நிதியை பெற டிஜிட்டல் கையெழுத்துக்கு பதிலாக மின்னணு கையெழுத்து அறிமுகம்

வருங்கால வைப்பு நிதியை பெற டிஜிட்டல் கையெழுத்துக்கு பதிலாக மின்னணு கையெழுத்து அறிமுகம் 
  மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சு.சிவ சண்முகம் கூறியதாவது: 
தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம் பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதிக்காகப் பிடித்தம் செய்யும் பணத்தை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துக்கு ஊழியர் விவரம், அவர்கள் செலுத்த வேண்டிய தொகை ஆகியவை அடங்கிய இசிஆர் படிவத்துடன் செலுத்துவர். 
தற் போது ஊரடங்கால் தனியார் நிறுவனங்கள் இசிஆர் படிவத்தை மட்டும் வழங்கினால் போதும். பணத்தை செலுத்த கால அவ காசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தனியார் நிறு வனங்கள் ஏற்கெனவே அளித்த இசிஆர் (மின்னணு விபரங்களுடன் இணைந்த சலான்) படிவத்துடன் வழங்கிய உறுதிமொழியில் தவறு இருந்தால் அதை திருத்தம் செய்ய தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி தனியார் நிறுவனங்கள் புதிய மின்னணு விவரங்களுடன் இணைந்த இசிஆர் படிவத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம். தனியார் நிறுவன ஊழியர் களுக்கு வருங்கால வைப்பு நிதி பணம் வழங்கப் பரிந்துரை செய்யும்போது, நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அலுவலர் டிஜிட்டல் கையெழுத்து சான்றிதழ் டாங்கிளை (டிஎஸ்சி டாங்கிள்) பயன்படுத்துவது வழக்கம். அந்த டாங்கிள் நிர்வாக வளாகத்தில் இருப்பதால் ஊரடங்கால் அதை பயன்படுத்துவதில் சிரமம் உள் ளது.
எனவே அந்த நிறுவனங்கள் மின்னணு கையெழுத்து (இ-சைன்) வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்னணு கையெழுத்துக்கு தேவை யான அனைத்து சான்றொப்ப நட வடிக்கைகளை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் வழி யாக ஏற்படுத்திக்கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive