++ தூக்கத்தில் நடப்பது என்றால் எப்படி முடியும்? ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
images%2528143%2529

தூக்கத்தில் நடக்கும் பழக்கம் துயில் நடை ( Sleep walking ) என்று சொல்வார்கள் , தூங்கிக் கொண்டிருக்கும் போது படுக்கையில் இருந்து எழுந்து தன் உணர்வின்றி நடப்பது , பெரும்பாலும் தூங்க ஆரம்பித்த முதல் சில மணிகளிலேயே இது நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் இவர்கள் வெற்றுப்பார்வையுடன் சில சாதாரண காரியங்களைச் செய்வார்கள்.

இது ஒரு வகை மனநோயின் வெளிப்பாடாகவே வருகிறது. இது தூக்கத்தில் தோன்றும் கனவு நிலையில் சாத்தியப்படுகிறது. எப்படி , கனவு என்பது நம் ஆழ்மனதில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் நிறைவேறா ஆசைகளின் வடிகாலாக அமைகிறதோ அந்த மாதிரியே ஆழ்மனதில் நீண்ட காலமாகப் பதிந்திருக்கும் கசப்பான அனுபவங்கள் எண்ணங்கள் , ஆசைகள் , ஆவேச உணர்ச்சிகள் போன்றவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சிதான் துயில்நடை.

தூக்கத்தில் நடப்பதற்கும் அந்த கணத்தில் அவர் காணும் கனவுக்கும் தொடர்புண்டு. கனவில் தோன்றும் உணர்வுளுக்கு ஏற்ப அவர் அசைவு கொடுக்கிறார். துயில் நடை ஓரிரு நிமிடங்கள்தான் நீடிக்கும். அதற்குள் அவர் சுயநினைவுக்கு வந்து விடுவார். ஆனால் நடந்தது செய்த செய்கைகள் எதுவுமே அவருக்கு ஞாபகமிருக்காது. பகலில் சிறிது நேரம் தூங்கினால் இரவில் அவ்வளவாகத் துயில்நடை வருவதில்லை என்று அறியப்பட்டுள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...