'கொரோனா' பரவலை தடுக்கும் வகையில், 'இ - பாஸ்' வழங்கும் அதிகாரம், செல்ல வேண்டிய மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவசிய தேவைநாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், மருத்துவ பரிசோதனை, நெருங்கிய உறவினர் திருமணம் மற்றும் இறப்புக்கு செல்ல விரும்புவோர், 'ஆன்லைன்' வழியேவிண்ணப்பித்தால், அவர்களுக்கு, 'இ - பாஸ்' வழங்கப்படுகிறது.
ஒரு மாவட்டத்தில் இருந்து அவசிய தேவைக்காக, மற்ற மாவட்டம் செல்ல விரும்புவோருக்கு, அவர்வசிக்கும் மாவட்டத்தின் கலெக்டர், 'இ - பாஸ்' வழங்கி வந்தார்.இதனால், மாவட்டத்தில் இருந்து வெளியே செல்லும் நபர்களின் விபரம், அந்த மாவட்ட கலெக்டரிடம் இருந்தது.ஆனால், தங்கள் மாவட்டத்துக்குள் வரும் நபர்கள் குறித்த விபரம், அவர்களுக்கு தெரிவதில்லை. எனவே, மாவட்டத்திற்குள் வந்தவர்களை கண்டறிந்து, கொரோனா பரிசோதனை செய்வது, தனிமைப்படுத்துவது சிரம மானது.
இதை தவிர்ப்பதற்காக, 'இ - பாஸ்' வழங்கும் நடைமுறையில், நேற்றுமுதல், மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது.அனுமதி கோர வேண்டும்இதன்படி, விண்ணப்பதாரர், தாங்கள் புறப்படும் மாவட்ட நிர்வாகத்திடம், 'இ - பாஸ்' பெற்ற நிலைமாறி, சென்றடையும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோர வேண்டும். விண்ணப்பதாரர் செல்ல வேண்டிய மாவட்டத்தின் கலெக்டர் அனுமதி அளித்தால் மட்டுமே, 'இ - பாஸ்' கிடைக்கும்.
இதுகுறித்து, மின்னாளுமை திட்ட அலுவலர்கள் கூறுகையில், 'விண்ணப்பதாரரின் மாவட்டம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என, எந்த பட்டியலில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து, 'இ - பாஸ்'வழங்கும் வகையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 100 சதவீதம் சரியான விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்படும்' என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...