கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் ஆசிரியர்கள் முழு கவச உடையுடன் பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபி யில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் வெளியூர் மாணவர்களுடன் ஒருவர் வர அனுமதி வழங்கப்படும். பாதிக்கப்பட்ட இடங்களில் தனியாக தேர்வு மையம் அமைக்கப்ப டும். அங்கு ஆசிரியர்கள் முழு கவச உடையுடன் பணிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளியில் படிக்கும் வெளியூரை சேர்ந்த மாணவர்கள் குறித்து கணக் கெடுக்கப்படுகிறது. மறுதேர்வு இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனத்தில் தேர்வு எழுத வருபவர்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும்.
சூழ்நிலை காரணமாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத முடியாத மாண வர்களுக்கு மறுதேர்வு வைப் பதுகுறித்து இன்று முதல்-அமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தேவைப்பட்டால் மறுதேர்வுக்கும் ஏற்பாடு செய்யப்படும். மலை பகுதியில் உள்ள மாணவர்களுக்கும் தேர்வு குறித்த அட்டவணை வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் கூறி னார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...