NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குழந்தைகளின் மூளைத் திறனை மேம்படுத்தும் வழிகள்!

குழந்தையின் முதல் ஆறு ஆண்டுகள்தான் அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். இந்த ஆறு ஆண்டுகளில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விதம்தான் அவர்களை உருவாக்குகிறது. இந்த மூளை செயல்திறன் மேம்படும் ஆறு ஆண்டுகளில் குழந்தைகளின் திறனை மேம்படுத்தும் வழிகள் பற்றிக் காண்போம்.
 
கைகளை வைத்து விளையாடுங்கள்:

குழந்தைகளுக்கு எண்ணற்ற டாய்ஸ் வாக்கிக் கொடுத்து விளையாடுவதைக் காட்டிலும், பீக்கபூ போன்ற கைகளை வைத்து விளையாடும் விளையாட்டுக்களை விளையாடுங்கள். 

தினமும் இரவு கதை சொல்லுங்கள்:


வழக்கமான பாட்டி வடை சுட்ட கதைகளைப் போல இல்லாமல், மிகப்பெரிய வண்ணமயமான படங்கள் கொண்ட புத்தகங்களைக் காட்டி கதை சொல்லுங்கள். அவர்கள் ஆங்கிலத் திறனை வளர்க்க தினமும் 10 நிமிடமாவது ஆங்கில கதைகளை வாசியுங்கள். பிரைட் நிறங்கள் குழந்தையின் கண்டறிதல் திறனை மேம்படுத்த உதவும். 
குழந்தை அழும் போது கவனியுங்கள்:


குழந்தைகளுக்கு உதவும்போது, ஆதரவாக இருக்கும்போது அவர்களின் மூளையில் நேர்மறையான எண்ணங்கள், செயல்கள் மேம்படும். இவை அனைத்தும் அவர்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டது. இவர்களை அரவணைத்து, அமைதிப்படுத்தும்போது அவர்களின் மூளை பாதுகாப்பு உணர்வை பெறும்.

மசாஜ் செய்யுங்கள்: 

                                                                                                               
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதன் மூலம் அவர்களின் அழுத்தம் குறையும். அன்பான தொடுதல் அவர்களின் வளர்ச்சியை மேம்படுத்தும். ப்ரீமெச்சூர் குழந்தைகளுக்கு தினமும் மூன்று முறை மசாஜ் செய்தால் அவர்கள் வளர்ச்சி தூண்டப்பட்டு விரைவாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளுடன் பாடுங்கள்:

நர்சரி ரைம்ஸ் எல்லாம் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே சொல்லிக் கொடுக்க வேண்டியது என்று இருந்துவிடாதீர்கள். அம்மா இங்கே வா வா தொடங்கி ரிங்கா ரிங்கா ரோசஸ் வரைக்கும் அவர்களுடன் இணைந்து விளையாடுங்கள், பாடுங்கள். இது அவர்களின் மூளையின் இயக்கத்தை மேம்படுத்தும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive