அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகளில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான விடைத்தாள் மைய மதிப்பீட்டு பணிகளும் , மண்டல முகாம் சார்ந்த பணிகளும் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது . தற்போது மாற்றியமைக்கப்பட்ட முகாம் பணிக்கான அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது . முகாம் பணிக்கான அட்டவணையையும் கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளையும் முகாம் அலுவலர்கள் பின்பற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் .
* மதிப்பீட்டு முகாம்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை ( Social Distance ) பின்பற்றும் பொருட்டு , ஒரு அறையில் ஒரு முதன்மைத் தேர்வாளர் ( CE ) , ஒரு கூர்ந்தாய்வாளர் ( SO ) மற்றும் ஆறு ( 6 ) உதவித் தேர்வாளர்கள் ( AE ) என மொத்தம் 8 நபர்கள் மட்டுமே அமர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியினை மேற்கொள்ளும் வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் .
* இந்நடைமுறை பின்பற்றப்படும்போது முதன்மைக் கல்வி அலுவலரால் ஏற்கனவே கூடுதலாக தேவைப்படும் அறைகள் கணக்கிடப்பட்டு மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள கூடுதலாக தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளிலும் மதிப்பீட்டு முகாம் பணிகளை மேற்கொள்ளலாம் என தெரித்துக் கொள்ளப்படுகிறது . அவ்வாறு கூடுதலாக வேறு பள்ளிகளில் மதிப்பீட்டு பணிகள் நடைபெறும் பட்சத்தில் அவ்விடங்களிலும் பணி நடைபெறும் நாட்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் .
* ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட மதிப்பீட்டு மையங்கள் முதன்மை மதிப்பீட்டு மையமாகவும் , தற்போது கூடுதலாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள பள்ளிகள் துணை மதிப்பீட்டு மையங்களாகவும் செயல்பட வேண்டும் .
* முதன்மை மற்றும் துணை மதிப்பீட்டு மையங்களில் கொரோனா - வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை ( Social Distance ) பின்பற்றும் பொருட்டு , தேர்வாளர்கள் அமர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளும் ஒவ்வொரு அறையிலும் மதிப்பீடு செய்யப்படவேண்டிய விடைத்தாள் கட்டுக்களை முதன்மை தேர்வாளரிடம் சென்று வழங்கவேண்டும் .
* ஒரே பாடத்திற்கான விடைத்தாட்களை முதன்மைக் மற்றும் துணை மதிப்பீட்டு மையத்திற்கு மதிப்பீடு செய்யும் வகையில் பிரித்து வழங்கப்படக் கூடாது .
* ஒவ்வொரு நாளும் அரசு வாகனம் மூலம் மட்டுமே துணை மதிப்பீட்டு மையத்திற்கு மதிப்பீடு செய்யப்பட வேண்டிய விடைத்தாட்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் .
* ஒவ்வொரு நாள் மாலையிலும் துணை மதிப்பீட்டு மையத்தில் மதிப்பீடு செய்யம்பணி நிறைவடைந்தாலோ அல்லது நிலுவையில் இருந்தாலோ அனைத்து விடைத்தாட்களையும் பாடவாரியாக கட்டி முதன்மை மதிப்பீட்டு மையத்திற்கே அரசு வாகனம் மூலம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் .
* துணை மதிப்பீட்டு மையத்தில் மதிப்பீடு செய்யம் பணியினை மேற்பார்வையிட தொடர்பு அலுவலராக தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் மூத்த தலைமை ஆசிரியர் / முதுநிலை ஆசிரியர் ஒருவரை நியமனம் செய்திட வேண்டும் .
* மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் ( MVO ) சமூக இடைவெளியினை கடைபிடித்து தேர்வாளர்களிடமிருந்து திருத்திய விடைத்தாட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் .
* மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் பணி ( Data Entry ) முதன்மை மதிப்பீட்டு மையத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் .
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் மதிப்பீட்டு பணி நடைபெறும் நாட்களில் மையங்களிலுள்ள மேசை , நாற்காலி , இருக்கைகள் என அனைத்து இடங்களிலும் பணி துவங்குவதற்கு முன்னதாகவே மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக கிருமி நாசினி தெளித்திட முகாம் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் .
* மையத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மையத்திற்கு வருகை புரியும்போது அனைவரும் தங்களது கைகளை சோப்பு / Hand Sanitizer கொண்டு சுத்தம் செய்வதற்கு ஏதுவாக சோப்பு மற்றும் Hand Sanitizer ஆகியவை முகாம்களில் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
* முகாம் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் . முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு முகக்கவசம் வழங்கிடுவதற்கும் முகாம் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் .
முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட முகாம் அலுவலர்கள் தேர்வுத் துறையால் வழங்கப்படும் அறிவுரைகளை உரிய முறையில் பின்பற்றுகிறார்களா என்பதனை ஆய்வு செய்து உறுதி செய்துக் கொள்ளுமாறும் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் முகாம் அலுவலர்களும் இணைந்து விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியினை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் சிறப்பாக நடத்திடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேலும் , மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் பின்னர் அனுப்பி வைக்கப்படும் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...