Hi Whatsapp Admins!

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Helo App -ல் உடனுக்குடன் Notifications பெற Click Here & Join Now! - https://m.helo-app.com/al/URyRSdZpF


தினம் ஒரு புத்தகம் - இருட்டு எனக்கு பிடிக்கும்

 சா தமிழ்ச்செல்வன்

வாசல் பதிப்பகம்

அறிவியல் இயக்க நண்பர் ஒருவரால் பரிசளிக்கப்பட்ட புத்தகம்.
 இதுவரை நாம் கேட்காத கேள்விகளும் நாம் தேடிக் கண்டடைய வேண்டிய பதில்களும் கொண்ட புத்தகம் இது.
 பேய் இருக்கா?  இல்லையா?
 சாதி என்றால் என்ன?
ஆண்பிள்ளைகள் ஏன் சமைக்க வேண்டும்?
 மனசு எங்கே இருக்கு?
 பாம்பு பால் குடிக்குமா?
 இருட்டானது ஏன் பயமாயிருக்கு?
 என பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்நூல்.

 நூலிலிருந்து
 உனக்கு மூளை இருக்கா?  யாராச்சும் நம்மை பார்த்து இப்படிக் கேட்டால் எப்படி இருக்கும்?

 மூளை துருப்பிடிக்காமல் இருக்க

 விடா முயற்சியும் உழைப்பும் வாய்ப்புகள்தான் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை.
 யார் வேண்டுமானாலும் விஞ்ஞானி ஆகலாம். கவிஞனாகலாம்.
 சமமான வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும்.

சமைப்பது யாருடைய வேலை

சமைத்துப் பாருங்கள் அது எவ்வளவு ஜாலியான வேலை என்பது தெரியும்.

 அம்மாவை நேசிக்கிறவங்க சமைக்க மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க.
 நீங்க எப்படி?

 இன்றைக்கு இரண்டு சாதி வேண்டுமானால் இருக்கலாம்.

 இப்போதும் மேல்ஜாதி கீழ்ஜாதி என்பதெல்லாம் சரி என்று சொல்பவர்கள் எல்லாம் ஒரு ஜாதி.
 அது முட்டாள் ஜாதி.
 சாதியாவது கீதியாவது எல்லோரும் மனித ஜாதி தான் என்று சொல்பவர்கள் அறிவாளி சாதி.
 இதில் நீங்க எந்த ஜாதி?

 நல்லா இருக்கும் நம் மக்களை அசிங்கமானவர்கள் என்று நம்ப வைத்து சோப்பு பவுடர்களை மக்கள் தலையில் கட்டுகிறது விளம்பரங்கள்.
 நாம்  இயற்கையிலேயே என்ன கலரில் பிறந்தோமோ அதுதான் உண்மையான அழகு.

 மனதுக்கு பிரியமானது எல்லாமே அழகுதான்.

 எல்லோர் மீதும் பிரியமாக இருந்தால் உலகமே அழகாக மாறிவிடும்.
 நல்ல உழைப்பு,  நல்ல படிப்பு,  நல்ல பழக்கம்,  அன்பான பேச்சு
இதுவே சிறந்த அழகு .

மன்னர்களின் வரலாற்றை தூக்கி தூர வைத்துவிட்டு நாம் மக்களின் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
 வெறும்  பாடபுத்தகத்தோடு நாம் நின்று விடக்கூடாது .

உண்மையான வரலாறு வெளியே தான் இருக்கிறது. அதை தேடிப்போகவேண்டும்.

 கிழமை,  வாரம்,  மாதம்,  என்பதெல்லாம் நாம் உண்டாக்கி வைத்தது. நமது கணக்கு போடும் வசதிக்காக வைத்துக்கொண்டது.

 நாள், கிழமை, தேதி என்பதெல்லாம் கற்பனை எனும் பொழுது செவ்வாயும், வெள்ளியும் புனிதமான நாட்கள்.
 மற்றதெல்லாம் ஆர்டினரி என்று சொல்வது சுத்த ரீல்.

 இருள் என்பது குறைந்த ஒளி என்று பாரதி கவிதை எழுதினார்.

இருள்
 நமக்கு சக்தி தருகிறது
 அமைதி தருகிறது
ஓய்வு தருகிறது
கற்பனை வளத்தை பெருக்குகிறது
இருட்டை நேசிப்போம்
 இருட்டின் வரவுக்காக தினமும் காத்திருப்போம்
 இருட்டு உங்களுக்குப் பிடிக்கும் அல்லவா.

பாடபுத்தகங்கள், அறிக்கைகள், பரீட்சைகள்,  பிரம்பதிகாரம், வீட்டுப்பாடங்கள், மதிப்பெண்கள், பதட்டமான பெற்றோர்கள்,
 என குழந்தைகள் மீது நாம் செலுத்தும் வன்முறை அவர்களின் கும்மாளங்களை மௌனத்தில் ஆழ்த்துகிறது.

 குழந்தைகளோடு கூடி வாசிக்கவும் விவாதிக்கவும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் திறந்த மனத்தோடு முயற்சிகள் துவக்கப்பட வேண்டும்.

 இப்புத்தகம் அத்திசையில் ஒரு தப்படி.

 தோழமையுடன்
 சீனி.சந்திரசேகரன்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments