உயர் நீதிமன்றத்தில் சென்னை திருநகரை சேர்ந்த சூர்யா
வெற்றிகொண்டான் தாக்கல் செய்த மனுவில், " இந்த மாதம் ( மே ) 31 ம் தேதி
யிலோ அதற்கு முன்போ ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை ஒரு
ஆண்டு உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது . இதனால் ஓய்வு பெறும் வயது 58
லிருந்து 59 ஆக அதிகரித்துள்ளது .
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 ஆயிரம் அரசு ஊழி யர்கள் ஓய்வு பெறுகிறார்கள் இந்த பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் . அரசின் அறிவிப்பால் இளைஞர்களின் ஒரு ஆண்டுகால எதிர்பார்ப்பு வீணாகி விடும்
அரசு பணிக்கு அதிக பட்ச வயது 35 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 34 மற்றும் 35 வயதில் உள்ள இளைஞர்க ளின் வேலை வாய்ப்பு முழுவதுமாக பறி போய்விடும் .
எனவே , அரசு பணிக்கான வயது வரம்பை ஒரு ஆண்டு நீட்டிக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ் வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது . இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் , அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது . வழக்கை விசாரித்த நீதிபதிகள் , மனுதாரர் பாதிக்கப் பட்ட நபர் அல்ல . அரசுப் பணிகள் தொடர்பான விவகாரங்களை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது எனத் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...