Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அறிவியல் உண்மை - அல்சர் எப்படி ஏற்படுகிறது?

images%2528145%2529

அல்சர் என்றால் பொதுவாக புண் என்று கூறலாம். உணவுப் பாதையில் ஏற்படும் புண்களைப் பற்றித்தான் அல்சர் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. வாய்ப்பகுதியிலிருந்து சிறுகுடல் வரை எங்கு வேண்டுமானாலும் அல்சர் ஏற்பட வாய்ப்புண்டு. மனித இரைப்பை ( வயிற்றுச்) சுவரில் இரைப்பைச் சுரப்பிகள் உண்டு. இச்சுரப்பிகளில் இருந்து நொதிகள் அடங்கிய நீர் சுரக்கிறது.

பெப்சின் என்ற நொதி உள்ளது. மேலும் இரைப்பை சுவரில் உள்ள சிறப்பு செல்கள் மூலம் செறிவு குறைந்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. இந்த பெப்சின் மற்றும் ஹைட்ரோகுளேரிக் அமிலமும் உணவுப் பாதையின் உட்சுவரான கோழைப் படலத்தை பாதிக்கும்போது அங்கு புண் - அல்சர் ஏற்படுகிறது.

 கூடுதலான அமில சுரப்பும் , பெப்சின் சுரப்பும் அதிகமானாலும் குடல் புண் ஏற்படும் . அல்சர் வாய்க்குழியில் வந்தால் ஆப்தோஸ் அல்சர் என்றும் , தொண்டையில் உணவுக்குழலில் புண் ஏற்பட்டால் ஈசோஃபெஜிடிஸ் அல்சர் என்றும் , இரைப்பையில் ஏற்படும் புண்ணை காஸ்ட்ரிக் அல்சர் என்றும் சிறுகுடல் பகுதியில் ஏற்பட்டால் டியோடினல் அல்சர் என்றும் கூறலாம் . பொதுவாக உணவுப் பாதையில் ஏற்படும் புண்களை பெப்டிக் அல்சர் என்றும் அழைப்பர்.

நல்ல ஆரோக்கியமுள்ள மனிதனிடம் அல்சருக்குக் காரணமான அமிலசுரப்பும் உணவுப் பாதையின் கோழைப்படலப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சமச்சீராய் இருக்கும் . மிளகாயும் , காட்டமான மசாலாப் பொருள்களும் வயிற்றில் அமிலத்தின் சுரப்பைத் தூண்டி , அல்சர் ஏற்பட வழிவகுக்கிறது. மசாலா சேர்ந்த உணவுப் பொருள்களைப் பார்த்தாலே கூட அமிலச் சுரப்பு தூண்டப்படும் . அதை சமன்படுத்தவே நாவில் எச்சில் ( உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது ) ஊறுகிறது.

புரதப்பொருள்கள் இரைப்பை நீர் சுரப்பை அதிகரிக்கும் . காபி , மது வகைகளும் இரைப்பை நீர் சுரப்பை அதிகரித்து அல்சருக்கு வழிவகுக்கும் . தந்தைக்கு அல்சர் இருந்தால் மகனுக்கு அல்சர் வரவும் அதிக வாய்ப்புண்டு. நேரம் தவறிய உணவுப்பழக்கம் , டென்ஷன் , அதிக கவலை , எந்நேரமும் பரபரப்பு போன்றவைகளும் காரணங்களாகும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive