காந்திகிராம கிராமியப் பல்கலையில்
இணையவழி கல்வி வகுப்புகள் ஆகஸ்ட் 17 முதல் தொடங்க உள்ளது, என பல்கலை
பதிவாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம்
காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமியப் பல்கலையில் கரோனா ஊரடங்கு
காரணமாக 2020-21 ம் கல்வி ஆண்டிற்கான நேரடி வகுப்புக்கள் நடத்தமுடியாத
சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில்
பல்கலை மானியக்குழு அறிவுறுத்தலின்படி காந்திகிராம பல்கலையில் தற்போது
பயின்றுவரும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல்
தொடங்கவுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்க்கழக
பதிவாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பேராசிரியர்கள் அனைரும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேராசிரியர்கள் தங்கள் வகுப்பிற்கான
விரிவுரையை காணொளிகவோ அல்லது விரிவுரை குறிப்புக்களாகவோ தயார் செய்து
பல்கலை இணையதளத்தில் உள்ள மாணவர்களுக்கான இணையமுகப்பு பக்கத்தில்
பதிவேற்றம் செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி
மாணவர்களின் வசதிக்காக விரிவுரை தொடர்பான காணொளிகள், விளக்க உரைகள்
மற்றும் குறிப்புகள் மின்னஞ்சல் மூலமாக பகிரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,
என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...