++ வேளாண் படிப்புகளுக்கு 38,000 விண்ணப்பங்கள் ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கு, 37 ஆயிரத்து, 879 விண்ணப்பங்கள் இணையவழியில் பதிவாகியுள்ளன.தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளங்கலை இளம் அறிவியல் பிரிவில், பல்கலையின் கீழ் உள்ள, 14 உறுப்பு கல்லுாரிகளில், 1,600 மற்றும் 28 இணைப்பு கல்லுாரிகளில், 3,100 என, மொத்தம், 4,700 இடங்கள் உள்ளன.

கடந்த, 8ம் தேதி துவங்கிய இணையவழி மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவில், முதல் நாளில் மட்டும், 8,770 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. நேற்று வரை, 37 ஆயிரத்து, 879 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. செப்., 17 வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.பிழைத்திருத்தம் செய்ய, செப்., 18 முதல், 20 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

செப்., 29ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். விபரங்கள் மற்றும் விண்ணப்ப கட்டணத்தை www.tnauonline.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.மாணவர் சேர்க்கை குறித்த விபரங்களுக்கு, www.tnauonline.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் கையேட்டை பார்க்கலாம். மேலும், விபரங்களுக்கு 0422 - 6611322, 6611345, 6611346 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...