++ 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை, தற்போதைய நிலையே தொடரும்" - அமைச்சர் செங்கோட்டையன் ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official


10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில்தான் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் விரைவில்  வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்க முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாகவும், மிக விரைவில் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து, இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் செங்கோட்டையன் கூறினார். 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவையில் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் அதுவே தமிழக அரசின் நிலைப்பாடு எனவும் திட்டவட்டமாக கூறினார்.அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் 10ம் தேதி முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை எடுத்துச்செல்ல 10 தொலைக்காட்சிகள் நேரம் ஒதுக்கியுள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...