தமிழக
அரசு பணியில், நிரந்தரம் செய்யப்படாத பெண் ஊழியர்களுக்கும், ஒன்பது
மாதங்கள் மகப்பேறு கால விடுப்பு அளிக்க, அரசு விதிகளில் திருத்தம்
செய்யப்பட்டு உள்ளது.
தமிழக அரசில், நிரந்தர பணியில் உள்ள, அரசு
பெண் ஊழியர்களுக்கு, ஒன்பது மாதத்திற்கு, பேறு கால விடுப்பு
வழங்கப்படுகிறது.சில துறைகளில், அவசர பணி நிமித்தமாக, தற்காலிகமாக
ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவ்வாறு நியமிக்கப்படும் ஊழியர்களில்,
பெண் ஊழியர்களுக்கு, பேறு காலத்தின் போது, ஈட்டிய விடுப்பு, 270
நாட்களுக்கு குறைவாக இருந்தாலும், அவர்களுக்கு முழு சம்பளத்துடன், 270
நாட்கள், பேறு கால விடுப்பு வழங்கலாம்.
இரண்டு குழந்தைகளுக்கு
குறைவாக உள்ள பெண்களுக்கும், முதல் பிரசவத்தில், இரட்டை குழந்தை பெற்ற
பெண்களுக்கும், இரண்டாவது ஒரு முறை பேறு கால விடுப்பு வழங்கப்படும்.
குழந்தையை தத்தெடுத்து வளர்த்தால், இந்த சலுகை கிடையாது. இதற்கான அரசாணையை,
பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் ஸ்வர்ணா வெளியிட்டு உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...