காரைக்குடி
அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில்,
பி.இ., - பி.டெக்., நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்பித்தல் பணி, 'ஆன்லைனில்' நேற்று துவங்கியது.
கல்லுாரி
முதல்வர் மலையாள மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், இணை
ஒருங்கிணைப்பாளர் சந்திரபிரபா கூறியதாவது: நடப்பு, 2020 - -21
கல்வியாண்டிற்கான இரண்டாமாண்டு நேரடி மாணவர் சேர்க்கை, ஆக., 30 வரை
நடக்கிறது.
மாணவர்கள், மின்னஞ்சல் உதவியுடன் பதிவு
செய்து, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.கொரோனாவால் நேரடி சேர்க்கை
கலந்தாய்வு, இணையதளம் மூலம் நடைபெறும்.ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய அறிவிப்பின்
படி, பட்டயப் படிப்பு படித்த மாணவர்கள், எந்த பாடப்பிரிவில்
படித்திருந்தாலும், இரண்டாமாண்டு நேரடி பொறியியல் சேர்க்கையில், தாங்கள்
விரும்பிய எந்தவொரு பாடப்பிரிவிலும் சேரலாம்.
விண்ணப்ப
பதிவு மற்றும் கலந்தாய்விற்கு, www.acgcetlea.com,
www.tnlea.com,www.accet.co.in, www.accetedu.in ஆகிய இணையதளங்களை
பார்வையிடலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...