++ காலை சிற்றுண்டியும் அவசியம்-புதிய கல்விக்கொள்கை! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
gallerye_073324722_2588126
புதிய கல்வி கொள்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், முக்கியமான அம்சமாக, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் உள்ளது. அதாவது, குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாகவும், ஆக்கபூர்வமாகச் சிந்திக்கவும், கல்வி கற்கவும், மதிய உணவு மட்டுமன்றி, காலை சிற்றுண்டியும் அவசியம் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* நாடு முழுவதும் 11.59 கோடி அரசு பள்ளி மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். 16 லட்சம் சமையலர்கள், உதவியாளர்களும் இதன் மூலமாக வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.

* குழந்தைகள் சத்துக் குறைபாட்டுடன் இருந்தால் அல்லது நல்ல உடல்நிலையில் இல்லாவிட்டால் அவர்களால் முழுமையாக கல்வி கற்க முடியாது. எனவே, அவர்களுக்கு மனவளம் மற்றும் சத்துள்ள உணவையும் வழங்க வேண்டும். சமூக சேவகர்கள், ஆலோசகர்கள், சமூக அமைப்பினரின் பங்களிப்பு ஆகியவை மூலம் சமூகத்துடன் ஈடுபாட்டை உருவாக்கலாம்.

* காலையில் சத்தான உணவுக்குப் பின் மாணவர்கள் படிக்கும்போது. ஆக்கபூர்வமாகச் செயல்பட முடியும். பாடங்களில் அதிக ஆர்வமும் ஏற்படும். எனவே, மதிய உணவுடன் மாணவர்களுக்கு எளிமையான, புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய சத்தான காலை உணவு வழங்கப்பட வேண்டும்.

* சூடான காலை உணவு வழங்க முடியாத இடங்களில் எளிதான, சத்து மிகுந்த நிலக்கடலைகள், கடலை மிட்டாய் வழங்கலாம். உள்ளூரில் கிடைக்கும் பழங்களும் வழங்கப்பட வேண்டும்.

* அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களுக்கு உடல் பரிசோதனை நடத்த வேண்டும்.

* 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும், கட்டாயம் அங்கன்வாடி, பால்வாடிகளில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு ஆற்றல், உணர்வு, உளவியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், விளையாட்டுடன் கூடிய கல்வி விளையாட்டுடன் கூடிய கல்வி கற்பிக்கப்படும். இதனால் அவர்களின் அறிவாற்றல், திறன், உளவியல் வளர்ச்சி அடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...