++ பணம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியீடுக..! அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official


பணம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கும் கல்லூரி படிக்கும் மாணவர்கள் 2 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் சார்பாக மூத்த வக்கீல் கே.துரைசாமி ஆஜராகி அண்ணா பல்கலைகழகம் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு விட்டது. செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட முடியாது என்று அறிவித்து விட்டது.

இதனால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவே பணம் கட்டினாலும் கட்டாவிட்டாலும் அனைத்து மாணவர்கள் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கூறினார். அண்ணா பல்கலையின் சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் கேட்டார். இதைக் கேட்ட நீதிபதி செமஸ்டர் செமஸ்டர் கட்டணம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் மாணவர்களுடைய தேர்வு முடிவுகளை உடனே அண்ணா பல்கலை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கில் அரசும், அதிகாரிகளும் பதிலளிக்க விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தார்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...