++ பிளாஸ்டிக் பட்டய படிப்பு சிப்பெட் அழைப்பு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

இளநிலை மற்றும் முதுநிலை பட்டய படிப்பில் சேர, சென்னையில் உள்ள, 'சிப்பெட்' என்ற, மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், அழைப்பு விடுத்து உள்ளது.

நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சிப்பெட்டில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டய படிப்பில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நடப்பு, 2020 - 2021ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, தற்போது துவங்கப்பட்டுள்ளது.

'பிளாஸ்டிக் பிராசஸிங் மற்றும் டெஸ்டிங்கில்' இரண்டு ஆண்டு முதுநிலை பட்டய படிப்பு; 'பிளாஸ்டிக் மோல்டு' தொழில்நுட்பம் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில், மூன்று ஆண்டு பட்டய படிப்புகளில் சேர, செப்., 7க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.சிப்பெட்டில் பட்டய படிப்பு முடித்தவர்கள், அண்ணா பல்கலையில், 'லேட்டரல் என்ட்ரி' வாயிலாக, பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில், பி.டெக்., படிப்பில் சேர தகுதி உடையவர்.மாணவர் சேர்க்கை தொடர்பான மேலும் விபரங்களுக்கு, சிப்பெட் மேலாளர் பீர்முகமதுவை, 94446 22771 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...