++ பாடப்புத்தகங்களை மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கிய தலைமையாசிரியர் ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official


விலையில்லா பாடப்புத்தகங்களை வீடுகளுக்கு சென்று வழங்கி, மாணவர்கள் வீட்டின் அருகே பாடம் நடத்திய தலைமை ஆசிரியர்


கரூர் மாவட்டம் , க.பரமத்தி ஒன்றியத்தில் தொட்டியபட்டி ஊ.ஒ.தொ.பள்ளியில் 67 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 5ம் வகுப்பு மாணவர்கள் போக 57 மாணவர்கள் 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 2020 - 21 ம் ஆண்டில் கல்வி பயில்கின்றனர். இதில் கொரோனா கால விடுமுறையால் மாணவர்கள் பள்ளிக்கு வர இயலவில்லை. ஆதலால் இன்று 03.08.2020 காலை முதல் விலையில்லா பாடப்புத்தகமும், புத்தகப்பையும் விநியோகிக்க வேண்டும் என்ற பள்ளிக்கல்வித் துறையின் அரசானைக்கு இணங்க பள்ளியின் தலைமையாசிரியர் கோ.மூர்த்தி ஒவ்வொரு மாணவரின் 57வீடுகளுக்கும் நேரில் சென்று புத்தகங்கள், மற்றும் புத்தகப் பைகளை வழங்கி, புதிய புத்தகத்தில் முதல் பாடத்தை மாணவர்களின் வீடுகளிலும், மர நிழல், மற்றும் கோயில் அருகில் மாணவர்களையும், பெற்றோர்களையும் உற்சாகப்படுத்த பாடம் நடத்தி அசத்தியுள்ளார். 95 கி.மீ தூரம் தனது காரில் புத்தகங்களையும் , புத்தகப்பைகளையும் எடுத்துக் கொண்டு பயணம் செய்து மாணவர்களை சந்தித்து புத்தகம் வழங்கி பாடம் நடத்தி திரும்பி யுள்ளார்.

மேலும் புத்தகத்திலுள்ள QR Code களை SCan செய்து அலைபேசியில் வீடியோ பாடம் காண்பிக்கப்பட்டது. பெற்றோர்களுக்கு QR Video க்கள்  தினமும் காண்பித்து படிக்கும் பாடங்களை பள்ளியின் whatsapp குரூப்பில் எடுத்து பதிவிடுமாறு பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டார். தினமும் வீட்டுப் பாடங்கள் whatsapp ல் பதிவிடுமாறு தலைமையாசிரியர் கேட்டுக் கொண்டார். வாட்ஸ் பதிவுகளின் படி மாணவர்கள் தொடர் கல்வி ஆர்வமுடன் கற்றிட  பெற்றோர் உதவியுடன் வீடியோ பதிவுகள் அனுப்பும் படி கேட்டுக் கொண்டார்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...