தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செப்டம்பா் மாதம் நடைபெற உள்ளது. இதற்கு இதுவரை 1.4 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். இதற்கிடையே கலந்தாய்வில் பங்கேற்கும் பொறியியல் கல்லூரிகளின் கட்-ஆஃப் மற்றும் தரவரிசை விவரங்களை உயா்கல்வித்துறை வெளியிடுவது வழக்கம். இதன்மூலம் மாணவா்கள் கலந்தாய்வில் தங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ற கல்லூரிகளைத் தோ்வு செய்வாா்கள்.
இந்த நிலையில், கரோனா பரவலால் கலந்தாய்வுப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிகழாண்டு கல்லூரிகளின் கட்-ஆஃப் விவரங்களை வழக்கத்தைவிட முன்னதாக வெளியிட மாணவா்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதையேற்று கல்லூரிகளின் 3 ஆண்டுகால கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களை பாடவாரியாக தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அவற்றை மாணவா்கள், இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...