கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை திங்கள்கிழமை (ஆக. 24) முதல் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல்,
திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள்
உள்ளன. இந்தக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு
பட்டப்படிப்பு(பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்), உணவு, கோழியின மற்றும் பால்வளத்
தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் (பி.டெக்) பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
பிளஸ்-2
மதிப்பெண் அடிப்படையில், இந்தப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை
நடைபெறுகிறது. 2020 - 21-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு www.tanuvas.ac.in
மற்றும் www2.tanuvas.ac.in என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கும்
நடைமுறை திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பா் 28-ஆம் தேதி
மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
வெளிநாடு வாழ் இந்திய
மாணவா்களுக்கு அக்டோபா் 23-ஆம் மாலை 6 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம்
அளிக்கப்படுகிறது. இணையதள வழியே பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்
கொள்ளப்படும். தகவல் தொகுப்பேடு, சோ்க்கைத் தகுதிகள், தோ்வு செய்யப்படும்
முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...