++ உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக பெறப்பட்ட CM CELL LETTER! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
கோரப்படும் தகவல்கள் :
1. M.SC. , மற்றும் M.PHIL . , கல்வித்தகுதியின் மூலம் பள்ளிக்கல்வி துறையின் கீழ் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் M.SC. , பட்டப்படிப்பிற்க்கு ஒரு உயர் கல்வி ஊக்க ஊதியம் பெற்றுள்ள நிலையில் M.PHIL . , பட்டப்படிப்பை பயின்றமைக்கு இரண்டாம் உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்க்கு தகுதியுண்டா என்பதனையும் அதன் அரசாணை எண் மற்றும் அரசாணை நகலினை அனுப்பும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

2. பார்வை 1. ல் கண்ட அரசாணையின் படி பள்ளிக்கல்வி துறையின் கீழ் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட M.PHIL . , பட்டப்படிப்பை பயின்றமைக்கு இரண்டாம் உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெற தடையாணை ஏதேனும் பெறப்பட்டுள்ளதா அதற்க்கான ஆணையின் நகலினை அனுப்பும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 3. பள்ளிக்கல்வி துறையின் கீழ் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர் பார்வை 1 ல் கண்ட அரசாணை வெளியிடுவதற்க்கு முன்பாக உயர் கல்வி முடித்த ஒருவர் தற்போது M.PHIL . , பட்டப்படிப்பை பயின்றமைக்கு இரண்டாம் உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்க்கு தகுதியுண்டா என்பதனை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நான் கேட்கும் தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விதிவிலக்கு பிரிவு 6 ( 1 ) ன் கீழ் கோரவில்லை தமிழ் நாடு அரசின் அரசுப்பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் அரசாணை எண்.114 , நள் 02.03.2006 ன் கீழ் மேற்கண்ட தகவல்களை பொதுத் தகவல் அலுவலர் அவர்களே நேரடியாக எனக்கு அளிக்கும்படி மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
IMG_20200823_205112

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...