''புதிதாக அமையும், 11 அரசு
மருத்துவக் கல்லுாரிகளிலும், 2021 - 22ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை
நடத்தப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
சென்னை,
சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின், 15வது
பட்டமளிப்பு விழா, 'ஆன்லைன்' வழியே நேற்று நடந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்'
மூலம், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: சவீதா நிகர்நிலை பல்கலை,
மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளித்து, சிறந்த மருத்துவர்களையும், சிறந்த
பொறியாளர்களையும், பிற துறை வல்லுனர்களையும் உருவாக்கி வருகிறது.
பட்டமளிப்பு
விழாவில், பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். 'நலமான மாநிலமே, வளமான
மாநிலம்' என்ற நோக்கத்தின் அடிப்படையில், ஏழை மக்களுக்கு, அவர்கள் வாழும்
பகுதிக்கு அருகிலேயே, தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க, முன்னோடி
திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது.
தற்போது,
தமிழகத்தில் உள்ள, 3,250 மருத்துவப் படிப்பு இடங்களுடன், 11 புதிய
மருத்துவக் கல்லுாரிகளுக்கான, 1,650 புதிய மருத்துவப் பட்டப் படிப்பு
இடங்களைச் சேர்த்து, 2021 - 22 முதல் மாணவர் சேர்க்கை நடக்கும்.இவ்வாறு,
அவர் பேசினார். விழாவில், பல்கலை வேந்தர் வீரையன், துணைவேந்தர்
ராகேஷ்குமார் ஷர்மா ஆகியோர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...